மொறு மொறு சுவையில் மீன் வறுவல் - ஓட்டல் சுவையில் செய்வது எப்படி தெரியுமா?
அசைவ உணவுகளில் மீன் ஆரோக்கியமான கடல் உணவு.
மீனில், சாச்சுரேட் கொழுப்பு உள்ளதால் இது உடல் எடையை அதிகரிக்காது. எடை குறைக்க விருப்பம் இருப்பவர்கள் அடிக்கடி மீனை உணவில் சேர்க்கலாம்.
உடல் ஆரோக்கியத்திற்கு ஒமேகா 3 மீனில் அதிகம் உள்ளது. இதனால் உடலுக்கு நல்ல ஆற்றல் கிடைக்கும்.
மீன் சாப்பிடுவதால் இதய நோய்கள் குணமாகும். இதேவேளை, மீனில் புரோட்டின், விட்டமின், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, அயோடின், மெக்னீசியம் என பல சத்துக்கள் உள்ளன.
இத்தகைய நன்மைகளை கொண்ட மீனை அடிக்கடி உணவில் சேர்த்து நன்மைகளை பெற்று கொள்ளுங்கள்.
இன்று நாம் மீனில் தேங்காய் சேர்த்து வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- துண்டு மீன் - 250 கிராம்
- சோளமாவு - 2 ஸ்பூன்
- எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்
- பச்சை மிளகாய் - 1
- கொத்தமல்லி - சிறிதளவு
- பூண்டு விழுது - 1/4 ஸ்பூன்
- எலுமிச்சை பழம் - பாதி
- மிளகு பொடி - 1 ஸ்பூன்
- மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
- இஞ்சி - சிறிய துண்டு
- தேங்காய் துருவல் - தேவையான அளவு
- கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை
இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, பச்சை மிளகாயை மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
பிறகு மிளகாய்த்தூள், எலுமிச்சை சாறு, மிளகு தூள், பூண்டு விழுது, சோளமாவை சேர்த்து நன்றாக கலக்கவும்.
இந்த மசாலாவை மீனுடன் சேர்த்து பிரட்டி 4 மணி நேரம் பிரிட்ஜ் பீரீசரில் வைக்கவும்.
அடுத்து ஊற வைத்த மீனை தேங்காய் துருவலில் போட்டு பிரட்டவும்.
தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் மீனை போட்டு மிதமான தீயில் பொரித்து எடுக்கவும். அவ்வளவு தான் மீன் பொரியல் ரெடி.