தேங்காய் சட்னியை இந்த பக்குவத்துல செஞ்சு பாருங்க.. சுவை தாறுமாறாக இருக்கும்- ரெசிபி இதோ!
பெரும்பாலான வீடுகளில் காலையுணவாக இட்லி அல்லது தோசை தான் கொடுப்பார்கள்.
அதற்கு எப்போதும் ஒரே மாதிரியான சட்னி செய்து கொடுக்காமல் தினமும் சற்று வித்தியாசமாக செய்து கொடுத்து வீட்டிலுள்ளவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள்.
அப்படி தேங்காய் சட்னி அரைக்கும் பொழுது சில டிப்ஸ்களை பின்பற்றினால் அதன் சுவையில் மாற்றம் கொண்டு வரலாம்.
அப்படியாயின், தேங்காய் சட்னி செய்யும் பொழுது பச்சை மிளகாய் சேர்ப்பது வழக்கம். அடுத்த முறை செய்யும் பொழுது பச்சை மிளகாயிற்கு பதிலாக வரமிளகாய் சேர்க்கலாம். அத்துடன் தாளிக்கும் பொழுது சாதாரண எண்ணெய் பயன்படுத்தாமல் நல்லெண்ணெய் பயன்படுத்தினால் இன்னும் சுவையாக இருக்கும்.
அந்த வகையில், வரமிளகாய் சேர்த்து எப்படி தேங்காய் சட்னி செய்வது? என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
சட்னிக்கு தேவையான பொருட்கள்
* தேங்காய் - 1/2 மூடி (துருவியது)
* வரமிளகாய் - 6
* வெங்காயம் - 1/2 (நறுக்கியது)
* பூண்டு - 4 சிறிய பல்
* கல் உப்பு - சுவைக்கேற்ப
* புளி - சிறிய துண்டு
* பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு தேவையான பொருட்கள்
* நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 2 சிட்டிகை
* வரமிளகாய் - 2
* சின்ன வெங்காயம் - 7-8 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
சுவையாக சட்னி அரைப்பது எப்படி?
முதலில் மிக்சர் ஜாரில் 1/2 மூடி துருவிய தேங்காய், 5-6 வரமிளகாய், பாதி வெங்காயம் மற்றும் 4 சிறிய பல் பூண்டு சேர்த்து நன்றாக அரைக்கவும். அதனுடன் கல் உப்பு, சிறிய துண்டு புளி, 2 டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலை ஆகியவற்றையும் கலந்து கொள்ளவும்.
பின்பு அதில், சிறிது நீரை ஊற்றி, ஓரளவு கொரகொரவென்று அரைத்து கொள்ள வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தில் அரைத்த சட்னியை தனியாக எடுத்து வைக்கவும்.
இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு நல்லெண்ணெயை ஊற்றி, சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.
அதில் வரமிளகாய் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கி, சட்னியுடன் சேர்த்து கலந்து விட்டு பரிமாறினால் சுவையான தேங்காய் சட்னி தயார்!
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |