viral video: கரப்பான் பூச்சிகள் முட்டையில் இருந்து வெளிவருவதை பார்த்துள்ளீர்களா? புல்லரிக்கும் காட்சி
கரப்பான் பூச்சிகள் முட்டையில் இருந்து வெளிவரும் மெய்சிலிக்க வைக்கும் காட்சியடங்கிய காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பொதுவாகவே பூச்சிகள் முட்டைகளில் இருந்து வெளிவரும் என்பது அனைவரும் அறிந்த விடயம் தான்.
கரப்பான் பூச்சிகள் மிகவும் பழமையான பூச்சி இணங்களில் ஒன்றாகும். உலகில் துருவப் பகுதிகள் தவிர்ந்து ஏனைய எல்லா பகுதிகளிலும் வாழும் திறனை இவை கொண்டுள்ளது.
கரப்பான் பூச்சிகள் எதையும் உண்ணக் கூடிய அனைத்துண்ணிகளாக திகழ்கின்றது. மேலும் இவை அனைத்து சூழல் மாற்றங்களுக்கும் இசைந்து வாழ பழக்கப்பட்டுள்ளமை அதன் சிறப்பம்சமாகும்.
ஹீமோகுளோபின் என்ற நிறமி இல்லாததால் இவற்றின் குருதி வெள்ளை நிறத்தில் இருக்கும். கரப்பான் பூச்சிகளின் நரம்பு மண்டலம் எளிமையானது.
உடல் பலபகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதியிலும் அதைக்கட்டுப்படுத்தும் நரம்பணுத்திரள்கள் காணபடுகின்றன.
இவற்றின் ஒரு முட்டையில் சுமார் 20 பூச்சிகள் வரையில் இருக்கும். அந்த வகையில் முட்டையில் இருந்து கரப்பான் பூச்சிகள் வெளிவரும் close up காட்சியடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
[7ERXRG
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |