Viral Video: கழுத்தில் சுற்றியிருந்த விஷப்பாம்பு... படமெடுத்து சட்டென தாக்கிய காட்சி
நபர் ஒருவரின் கழுத்தில் சுற்றியிருந்த நாக பாம்பு ஒன்றினை மற்றொரு நபர் எடுத்து வித்தை காட்டிய போது குறித்த பாம்பு அந்த சட்டென கடித்துள்ள காட்சி பயத்தை ஏற்படுத்தியுள்ளது.
மனிதரை தாக்கிய பாம்பு
பொதுவாக பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பது பழமொழி. அதிக விஷத்தன்மை கொண்ட பாம்பு இனங்கள் மனிதர்களை கடிக்கும் போது இறக்கும் நிலைகூட ஏற்படுகின்றது.
ஆனால் பாம்புகளின் வேட்டை பார்ப்பதற்கு மிகவும் சுவாரசியமாகவும், மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றும் நிலையில் இருக்கும். பாம்புகள் தவளை, மற்றொரு பாம்பை வேட்டையாடுவதை நாம் அவதானித்திருப்போம்.'
சிலர் பாம்புகளை பிடித்துக் கொண்டு சுற்றி நிற்பவர்கள் முன்பு கெத்து காட்ட நினைப்பவர்கள். இங்கும் நபரின் கழுத்தில் விஷப்பாம்பு சுற்றியுள்ளது.
இதனை மற்றொரு நபர் எடுத்து வித்தை காட்டிய போது, அப்பாம்பு நபரை சட்டென கடித்துள்ளது. குறித்த பாம்பு அதிகம் விஷத்தன்மை கொண்ட ராஜநாகமாக இருந்துள்ளது.
மற்றவர்களுக்கு வித்தை காட்டுவதாக நினைத்து தனது உயிரை இவ்வாறு பணய வைப்பது மிகப்பெரிய தவறாகும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |