இந்திய கேப்டன் தோனி தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன முதலமைச்சர்
இந்திய கிரிக்கெட் வரலாற்றின் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவரான மகேந்திர சிங் தோனிக்கு இன்று பிறந்தநாள்.

உலகம் முழுவதிலும் இருந்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வரும் வேளையில், தமிழக முதலமைச்சரும் தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவருமான ஜோசப் விஜய் தனது அதிகாரப்பூர்வ 'CMOTamilNadu' எக்ஸ் பக்கத்தில் தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
The images that broke the internet 1 Year ago on this same day 🔥
— Vijay Fans Trends (@VijayFansTrends) August 12, 2022
Thalapathy Vijay & Thala Dhoni 😎#Beast #Varisu @actorvijay pic.twitter.com/qoay1RM4DN

முதலமைச்சர் விஜய்யிய் பதிவில் குறிப்பிட்டதாவது "உங்கள் பெயர் ஒலிக்கும் ஒவ்வொரு முறையும் மைதானத்தில் எழும் விசில் சத்தமும், நீங்கள் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் பதித்திருக்கும் இடமும் தமிழ்நாட்டின் விளையாட்டு உணர்வின் ஒரு அங்கமாக மாறிவிட்டது. நமது 'கேப்டன் கூல்' மகேந்திர சிங் தோனிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

உங்கள் அசாதாரண கிரிக்கெட் பயணம், அமைதியான தலைமைத்துவம், எளிமையான குணம் ஆகியவை தொடர்ந்து தலைமுறைகளை ஊக்குவித்து வருகின்றன. நல்ல உடல்நலத்துடனும், மகிழ்ச்சியுடனும், இன்னும் பல வெற்றிகளுடனும் வாழ வாழ்த்துகள். உங்களுக்காக ஒலிக்கும் விசில் சத்தம் நாளுக்கு நாள் இன்னும் அதிகரிக்கட்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |