சிட்டிசன் பட நடிகையா இது? அடையாளமே தெரியாமல் மாறிய புகைப்படம்
Actress Vasunthra Doss: தமிழ் சினிமாவில் சிட்டிசன் படத்தில் நடித்த பிரபல நடிகை வசுந்தரா தாஸின் புகைப்படம் வைரலாகி வருகின்றது.
வசுந்தரா தாஸ்
தமிழ் சினிமாவில் 2000ம் ஆண்டு கமல்ஹாசனுடன் நடித்த ஹேராம் படத்தின் மூலமாக திரையுலகிற்கு அறிமுகமானவர் தான் நடிகை வசுந்தரா தாஸ்.
தமிழில் ஒரு சில படங்களில் இவர் நடித்திருந்தாலும், ரசிகர்கள் மத்தியில் அதிக பிரபலமானவர். பெங்களூரை பூர்வீகமாக கொண்ட இவர் ஆறு வயதில் இந்துஸ்தானி பாரம்பரிய இசையை கற்று வந்தவர் ஆவார்.
கல்லூரி விழாவில் பாடல்களை பாடிய நிலையில், சினிமாவில் பாடகியாக அறிமுகம் ஆனார். ஹேராம் படத்தினைத் தொடர்ந்து அஜித்துடன் சிட்டிசன் படத்தில் நடித்துள்ளார்.

இப்படம் இவருக்கு பெரிய வெற்றியைத் தந்த நிலையில், தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
முதல்வன் படத்தில் ஷகலகா பேபி, விஜய்யின் குஷி படத்தில் கட்டிப்புடி கட்டிப்புடி என்ற பாடலை பாடி பிரபலமானார். 2007ம் ஆண்டிற்கு பின்பு நடிப்பிலிருந்து விலகிய இவர், 2012ம் ஆண்டு தனது நீண்ட கால நண்பரும், டிரம்மர் கலைஞருமான ராபர்டோ நரேன் என்பவரை திருமணம் செய்தார்.
திருமணத்திற்கு பின்பு இசையில் தனது பயணத்தினை தொடங்கிய இவர் மியூசிக் பேண்ட் மூலமாக இசைக்கச்சேரிகளை நடத்தி வருகின்றார்.
இவரது தற்போதைய புகைப்படம் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |