விஷாலுடன் காதல் சர்ச்சையில் சிக்கிய அபிநயாவுக்கு திருமணம்- புன்னகையுடன் நடந்து வரும் காட்சி
நாடோடிகள் பட நடிகை அபிநயாவின் திருமணப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
நடிகை அபிநயா
நடிகர் சமுத்திரகனி இயக்கத்தில் கடந்த 2009ம் ஆண்டு வெளியான “நாடோடிகள்” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியவர் தான் நடிகை அபிநயா.
இவர், ஒரு மாற்றுதிறனாளியாக இருந்தாலும், தன்னுடைய யதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து உள்ளார்.
இதனை தொடர்ந்து, ஆயிரத்தில் ஒருவன், சூர்யாவின் 7ஆம் அறிவு, ஈசன், ஜீனியஸ், வீரம், தனி ஒருவன், குற்றம் 23, சீதா ராமம், மார்க் ஆண்டனி, மலையாளத்தில் சமீபத்தில் வெளியான பணி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.
இதற்கிடையில், நடிகர் விஷால் உடன் அபிநயாவுக்கு காதல் என்றும் இருவரும் திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக திடீரென வதந்திகள் கிளம்பியது.
அபிநயா விளக்கம்
விஷால் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் பொழுது அபிநயா கோல் செய்து, அவர் என்னுடைய நண்பர் என்றும், அவருடைய உடல்நிலை குறித்து விசாரித்ததாகவும் கூறியிருந்தார்.
அப்போது பிரபல யூடியூப் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் தான் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் கூறியிருந்தார்.
திருமணம்
இந்த நிலையில், நடிகை அபிநயா “சன்னி வர்மா” என்பவரை காதலித்து கடந்த மார்ச் 9ம் தேதி அவருடன் நிச்சயம் செய்து கொண்டார்.
இதனை தொடர்ந்து நேற்றைய தினம் ஐதராபாத்தில் நடிகை அபிநயாவுக்கும், இவருடைய காதலருக்கும் பிரம்மாண்டமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது.
இதன் போது ஜோடியாக எடுத்து கொண்ட புகைப்படங்கள் இணையவாசிகளின் கவனத்திற்கு சென்றுள்ளது. அத்துடன் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |

