ஒருவழியாக நடந்துமுடிந்த நடிகை அபிநயாவின் நிச்சயதார்த்தம்: புகைப்படங்கள் வைரல்
பிரபல நடிகை அபிநயா நிச்சயதார்த்த புகைப்படங்களை தனது சமூகவலைதளங்களில் பகிர்ந்து உள்ளார். இதன் மூலம் தனது வருங்கால கணவரை அறிமுகம் செய்துள்ளார்.
நடிகை அபிநயா நிச்சயதார்தம்
தமிழில் வெளியான "நாடோடி" படத்தின் மூலம் தன் நடிப்பை காட்டி ஏராளமான ரசிகர்களை தன் வசப்படுத்தியவர் தான் நடிகை அபிநயா. இந்த படத்திற்கு பின்னர் தமிழில் "ஏழாம் அறிவு", "தனி ஒருவன்", "வீரம்", "மார்க் ஆண்டனி" உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்துள்ளார்.
இத தவிர மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்துள்ளார். சமிபத்தில் இவர் கொடத்த பேட்டியில் நிண்ட கால நண்பரை தான் காதலிப்பதாக கூறியிருந்தார்.
இதனால் ரசிகர்கள் பலர் நடிகர் விஷாலுடன் செர்த்த வத்தி செய்திகளை பரப்பி வந்தனர். இதற்கு சிறந்த பதிலடி கொடுத்தார் நடிகை அபிநயா.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பாக அபிநயா தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக தனது கை மற்றும் வருங்கால கணவரின் கையை இணைத்து இணையத்தில் வெளியிட்ட புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.
வெகசனா கார்த்திக் என்பவருக்கும் அபிநயாவுக்கும் இடையே நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. விரைவில் திருமண தேதியை அபிநயா அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
