தாங்க முடியாத வலியா? Chymoral Forte மாத்திரைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
வலி நிவாரணி மற்றும் அழற்சி எதிர்ப்பு மருந்தாக Chymoral Forte மாத்திரைகள் பயன்படுத்தப்படுகிறது.
கீல்வாதம் மற்றும் முடக்குவாதம் போன்ற எலும்பு மற்றும் மூட்டு தொடர்பான வலிகளுக்கும், அறுவைசிகிச்சைகளுக்கு பின்னர் காயங்கள் ஆறவும், வலி, வீக்கத்தை குறைக்கவும் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
ENT சிகிச்சை, பல் மருத்துவம், C- Section அறுவைசிகிச்சைகளுக்கு பின்னர் வலியை குறைக்கவும் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
இம்மாத்திரைகளில் உள்ள மூலப்பொருட்களான trypsin and chymotrypsin என்சைம்கள் வீக்கம், வலி மற்றும் வீக்கத்தால் சிவந்து போவதற்கு எதிராக செயல்படுகிறது.
குறிப்பாக உணவு மண்டலம் புரோட்டீன்களை சீராக உறிஞ்சுவதற்கு உதவுவதால் ரத்த ஓட்டம் சரியாகி காயமடைந்த பகுதி மற்றும் வலியை குறைக்கிறது.
மேலும் செரிமானத்தை சீராக்குவதற்கு உடலுக்கு தேவையான சத்துக்கள் உறிஞ்சப்பட்டு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமாக உதவுகிறது.
உணவு எடுத்துக்கொள்வதற்கு அரைமணிநேரத்திற்கு முன்பாக Chymoral Forte மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம்.
மருத்துவர் பரிந்துரைக்கும் அளவுகளில் மட்டுமே எடுக்கவும், சுயமாகவே மருந்துகளை நிறுத்திக்கொள்ள வேண்டாம்.
இது பொதுவான பக்கவிளைவுகளை ஏற்படுத்தாது என்ற போதிலும், அரிதான சூழலில் உண்டாகலாம்.
பக்கவிளைவுகள்
அரிப்பு
மூச்சுவிடுவதில் சிரமம்
தொண்டை மற்றும் உதடுகளில் வீக்கம்
சுறுசுறுப்பு இல்லாமல் இருத்தல்
வயிற்று வலி
வயிற்றுப்போக்கு
இதுதவிர வேற பக்கவிளைவுகள் இருந்தாலும் மருத்துவரை தொடர்பு கொள்ளவும்.
வயிற்றில் வாயு தொந்தரவும் ஏற்படலாம், பக்கவிளைவுகள் தொடர்ந்தாலோ தீவிரமாக இருந்தாலோ மருத்துவரை அணுகவும்.
நோயின் தன்மையை பொறுத்து மருத்துவர் பரிந்துரைக்கும் நாட்களுக்கு மட்டுமே எடுத்துக் கொள்ளவும்.
கால அளவை தாண்டி தொடர்ச்சியாக எடுத்துக்கொள்வது தீவிரமான பக்கவிளைவை உண்டாக்கும்.
பெரும்பாலும் 10 நாட்கள் அல்லது 2 வாரங்களுக்கு மட்டுமே Chymoral Forte மாத்திரைகள் எடுத்துக்கொள்வது நல்லது.
கர்ப்பிணி பெண்கள், தாய்ப்பாலூட்டும் பெண்கள் மருத்துவர்கள் அறிவுரை இல்லாமல் எடுத்துக்கொள்ள வேண்டாம்.
Chymoral Forte பயன்படுத்தும் போது ஆல்கஹால் எடுப்பதை தவிர்க்கவும். சிறுநீரகம், கல்லீரல் மற்றும் அல்சர் நோயாளிகளும் மருத்துவரிடம் முன்கூட்டியே தெரிவிக்கவும்.
penicillin மற்றும் chloramphenicol ஆன்டிபயாடிக்குடன் இணைந்து எடுத்துக்கொள்ளும் போது பக்கவிளைவுகள் தீவிரமாகும்.
ஆயுர்வேத மருந்துகள் எடுத்துக்கொண்டாலோ, அறுவைசிகிச்சைக்கு திட்டமிட்டிருந்தாலோ, தடுப்பூசி எடுத்துக்கொள்ளவிருந்தாலோ மருத்துவரிடம் தெரிவிக்கவும்.
Chymoral Forte மாத்திரைகள் மற்ற மருந்துகளுடன் இணைந்து வினைபுரியும் என்பதால் உங்களது உடல்நிலை குறித்தும், மற்ற மருந்துகள் குறித்தும் மருத்துவரிடம் தெளிவாக விளக்கம் அளிப்பது சிறந்தது.
குறிப்பு- மருத்துவரின் அறிவுரை இல்லாமல் சுயமாக மருந்துகளை எடுத்துக்கொள்வது ஆபத்தானது!!!
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |