இட்லி, தோசைக்கு ஏற்ற ரோட்டு கடை சட்னி! எப்படி செய்யணும் தெரியுமா?
பொதுவாக இந்தியாவில் காலை, இரவு வேளைகளில் இட்டி, தோசை தான் உணவாக இருக்கும்.
அந்த தோசை, இட்லிக்கு தொட்டுக்கொள்ள தேங்காய் இல்லாமல் சட்னி செய்து சுவைத்தால் மிகவும் அருமையாக இருக்கும்.
இதில் இரண்டு விதமன சட்னியை செய்து சாப்பிடலாம்.
தண்ணி சட்னி செய்முறை
ஒரு கடாயில் இரண்டு கரண்டி எண்ணெய் சேர்த்து அதில் நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், 6 பச்சை மிளகாய் மற்றும் தேவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
பின்னர் வதக்கிய பொருட்களை ஆறவிட்டு மிக்ஸியில் சேர்த்து அதில் இரண்டு கரண்டி பொட்டுக்கடலை, சிறிய துண்டு புளி, இரண்டு பற்கள் பூண்டு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் தாளிப்பதற்கு ஒரு கரண்டி எண்ணெய் மற்றும் இரண்டு மிளகாய், கருவேப்பிலை, கடுகு வெந்தயம் சேர்த்து தாளித்து தாளித்த பொருட்களை எல்லாம் சட்னியில் சேர்த்துக் கொண்டால் மதுரை தண்ணி சட்னி தயார்.
கார சட்னி செய்முறை
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடாகியதும் பெரிய நறுக்கிய வெங்காயம், ஏழு மிளகாய், 4 பூண்டு பற்கள், சிறிய துண்டு புளி சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள்.
பிறகு அதில் ஒரு மேசைக்கரண்டி உளுத்தம் பருப்பை சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள். வதக்கிய எல்லா பொருட்களையும் ஆற வைத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளுங்கள்.
பின்னர் அரைத்து எடுத்த சட்னிக்கு தேவையான அளவு தண்ணீர் விட்டு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள்.
பின்னர் தாளிப்பதற்கு ஒரு கரண்டி எண்ணெய் மற்றும் இரண்டு மிளகாய், கருவேப்பிலை, கடுகு உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்து தாளித்த பொருட்களை எல்லாம் சட்னியில் சேர்த்துக் கொண்டால் தக்காளி இல்லாமல் ஹோட்டல் சுவையில் கார சட்னி தயார்.