சட்னி செய்ய இனி இந்த பொடி போதும் - ரெசிபி இதோ... ஒரு மாதம் வரை இருக்கும்
Healthy Food Recipes
By Pavi
சட்னியை இனிமேல் நாளுக்கு நாள் அரைக்க தேவை இல்லை இந்த பொடி ஒன்று செய்து வைத்தால் சட்னியை உடனே செய்யலாம்.
சட்னி பொடி
பொதுவாக வீட்டில் நாளுக்கு நாள் காலை உணவிற்கு சட்னி அரைப்பார்கள்.
ஆனால் பேச்சுலர்ஸ், ஹாஸ்டல் இளைஞர்கள், அலுவலகம் செல்பவர்களுக்கு காலை உணவிற்கு சட்னி செய்ய மிகவும் சிரமாக இருக்கும். இதற்காக உடனே ஒரு பொடியை போட்டு சட்னி செய்வது மிகவும் ஈஸியாக இருக்கும்.
அந்த பொடியை எப்படி வீட்டிலேயே செய்யலாம் என்பதை பார்க்கலாம். இது தான் 'சட்னி ப்ரீமிக்ஸ்'.

தேவையான பொருட்கள்
- வேர்க்கடலை,
- பொட்டுக் கடலை,
- காய்ந்த மிளகாய்,
- கறிவேப்பிலை,
- பூண்டு பல்,
- சீரகம்,
- உப்பு,
- புளி,
- கடுகு.

செய்முறை
- முதலில் வேர்க்கடலையை வறுத்து தோலை நீக்கவும். அதே பாத்திரத்தில் சிறிது எண்ணெய் சேர்த்து, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, சீரகம் ஆகியவற்றை வதக்கி, தனியாக வைக்கவும்.
- இப்போது, ஒரு மிக்ஸியில் வறுத்த வேர்க்கடலை, பொட்டுக்கடலை, வறுத்த காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பூண்டு, ஒரு சிறிய துண்டு புளி, போதுமான உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும்.
- இவற்றை நன்றாக அரைக்கவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் எண்ணெயைச் சூடாக்கி, கடுகு, சீரகம், கறிவேப்பிலை மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- இந்த தாளிப்பை அரைத்த பொடியுடன் சேர்த்து மிக்ஸ் செய்யவும். இதை உலர்ந்த கண்ணாடி போத்தலில் அடைக்கவும்.

எப்படி பயன்படுத்துவது?
- சட்னி சாப்பிட ஆசைப்படும் நேரத்தில் இந்த பொடியை எடுத்து சுடு நீரில் கலக்கவும்.
- இது இரண்டு நிமிடங்களில் சட்னியாக மாறும்.
- இந்த சட்னி இட்லி, தோசை, வடை போன்ற அனைத்து வகையான டிஃபன்களிலும் இது மிகவும் சுவையாக இருக்கும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US