பூமியில் சொர்க்கத்தை பார்த்ததுண்டா? 300 நாட்களுக்கு வர்ணத்தில் ஜொலிக்கும் நகரம்
ஒரு நகரத்தில் 300 நாட்களுக்கு வானம் மாயஜால வர்ணமாக ஒளி வெள்ளத்தில் மிக அழகாக காட்சி அளிக்கிறது. இது பற்றிய முழுமையான தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.
மாயாஜால நகரம்
சர்ச்சில் எனும் நகரில் ஆண்டு முழுவதம் சுமார் 300நாட்களுக்கு வடதுருவ வர்ண ஜாலம் உண்டாகும். இந்த வானியல் நிகழ்விற்கு பெயர் அரோரா எனப்படுகின்றது.
இதை தவிர குளிர் காலத்தில் இங்கு வானத்தில் அற்புதமான காட்சிகள் தோன்றுமாம். பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் தான் வானம் தெளிவாகவும் இருட்டாகவும் இருக்கும்.
இந்த வானியல் நிகழ்வை மிகச் சிறப்பாகக் காண, நிலவொளி போன்ற வேறு விதமான ஒளி அதிகமாக இல்லாமல் இருப்பது அவசியம். சர்ச்சில் நகரம் இந்த விஷயத்திலும் தனித்துவமானது.
வானத்தில் அரோரா நிகழ்வைக் காண வசதியான பல தங்குமிடங்கள் இந்த நகரத்தில் காணப்படுகின்றன. இதுமட்டுமன்றி போலார் பியர் எனப்படும் துருவக் கரடிகளுக்காகவும் புகழ்பெற்றது.
'துருவ கரடிகளின் தலைநகரம்' என்றும் இதை அழைப்பார்கள். இந்த கரடி இனங்கள் மட்டுமின்றி அற்புதமான பல உயிரினங்களும் இங்கு வாழ்கின்றன. இங்கே வாழ்வது நமக்கு சொர்க்கத்தை பார்ப்பது போல இருக்கும்.
இங்கே பெலுகா திமிங்கலங்கள் காணப்படுகின்றன. இங்கு பல அதிசயங்கள் கொட்டி கிடப்பதால் பயணம் செல்வோர்க்கு எதை பார்த்து ரசிப்பது என்பது குழப்பமாகவே இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |