365 நாளும் கிறிஸ்துமஸ் எங்கு தெரியுமா? பலரும் அறியாத சுவாரசிய உண்மை
குட்டையான, குண்டான உருவம், வெண்மையான தாடி, சிவப்பு உடை, சர்க்கஸ் கோமாளி அணிவது போன்ற ஒரு குல்லா, முதுகில் தொங்குகின்ற ஒரு நீண்ட பையில் பரிசுகள் சுமக்க காட்சி தருபவர் தான் கிறிஸ்மஸ் தாத்தா.
கிறிஸ்மஸ் தரும் பரிசுகளுக்காக பல நாட்களாக காத்திருக்கும் குழந்தைகளும் உள்ளனர்.
கிறிஸ்மஸ் தாத்தா
மேற்கத்திய நாடுகளிலும் சில கீழை நாடுகளிலும் மட்டுமே காணப்பட்ட கிறிஸ்மஸ் தாத்தா இன்றைக்கு உலகெங்கும் பரவி அவருக்கே உரித்தான சிவப்பு உடையில் வெள்ளைத்தாடி, கண்ணாடி என வலம் வரத் தொடங்கி விடுவார்.
8 கலைமான்களை கொண்ட வண்டியில் திறந்த பனியில் சறுக்கி ஓடும் வாகனத்தில் சவாரி செய்யும் இவரை சாண்ட்டா என்றும் சாண்ட்ட கிளாஸ் என்றும் அன்போடு குழந்தைகள் குதூகலித்துக் கொண்டாடுவார்கள்.
உலகில் எந்தக் கிறிஸ்தவக் குழந்தையிடமும் சாண்ட்ட கிளாஸ் என்றால் அறியாத குழந்தைகளே இல்லை.
வரலாறு
முதன்முதலில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்தவர் செயின்ட் நிக்கோலஸ். இவர் பிறந்தது தென் துருக்கியில் இருக்கும் லிசியாவில் தான்.
இவர் 4ஆம் நூற்றாண்டை சேர்ந்தவர். 16ம் நூற்றாண்டில் சிலுவை போர் நடந்த போது செயின்ட் நிக்கோலஸ் ஐரோப்பாவிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
அன்பு, நல்லுறவு, தாராள மனம், குழந்தைகளிடம் விருப்பம் ஆகிய நற்குணங்களைக் கொண்டவர் தான் இந்த செயின்ட் நிக்கோலஸ். அவர் தனக்கு உரிய விருந்து நாளன்று (டிசம்பர் - 6) குழந்தைகளுக்குப் பரிசு கொடுத்து மகிழ்வார்.
புனிதர் நிகோலாஸ் காலத்தில் பிஷப்புகள் அணிந்திருந்த அங்கியே கிறிஸ்துமஸ் தாத்தாவின் உடையாகிவிட்டது.
அப்போது முதல் உலகம் முழுவதும் அன்பின் திருவுருவமாக கிறிஸ்துமஸ் தாத்தா உலா வருகிறார்.
கற்பனை கதை
சாண்டா கிளாஸ் என்ற ஒரு கதாப்பாத்திரம் முழுக்க முழுக்க கற்பனையான கதாபாத்திரம் என சிலர் கூறுகிறார்கள்.
ஆனால், பலர் கிறிஸ்து பிறந்து 200 வருடங்களுக்குப்பின் சாண்டாகிளாஸ் வாழ்ந்ததாக கூறுகிறார்கள்.
குழந்தைகளை கிறிஸ்துமஸ் தினத்தில் குதூகலப்படுத்தவே இப்படி ஒரு கதை புனையப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
கிறிஸ்மஸ் தாத்தா கிராமம்
அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தின் தென்மேற்கு பகுதியில், எவான்ஸ்வில், ஜாஸ்பர் என்று இயல்பான பெயர்களை கொண்ட பல இடங்கள் உள்ளன.
162 வழித்தடத்தை நோக்கி சென்றால், சாண்டா கிளாஸ் 4 மைல் தொலைவில் உள்ளது என்ற பதாகை உள்ளது. அந்த 4 மைல் பயணம் முடிவுக்கு வந்துள்ளது என்பதை, குறிக்கும் வகையில், 10 அடி உயரத்தில் சாண்டா கிளாஸ் சிலை நம்மை வரவேற்க உள்ளது.
இங்குள்ள பிரதான தெருவின் பெயர் கிறிஸ்துமஸ் பௌல்வார்ட். அந்த கிராமத்தில் 2500 பேர் வாழக்கூடிய இடத்தின் பெயர் கிறிஸ்துமஸ் ஏரி கிராமம்.
சாண்டா கிளாஸ் கிராமத்தில் 365 நாளும் கிறிஸ்துமஸ் தான் என அவ்வூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.
