சாக்லேட் தேங்காய் பால்ஸ் சாப்பிடனுமா? வெறும் பத்தே நிமிடத்தில் செய்யலாம் வாங்க...!
சாக்லேட், தேங்காய் சேர்த்து இன்று சூப்பரான ஸ்நாக்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- தேங்காய் துருவல் - 200 கிராம்
- மேரி பிஸ்கட் - 10
- சாக்லேட் பவுடர் - 4 ஸ்பூன்
- வென்னிலா எசன்ஸ் - அரை டீஸ்பூன்
- கன்டன்ஸ்டு மில்க் - 150 கிராம்
- பால் - அரை கப்
- வெண்ணெய் - 2 டீஸ்பூன் (உருகியது)
அலங்கரிக்க தேங்காய்
- துருவல் - தேவையான அளவு
செய்முறை
மேரி பிஸ்கட்டை மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பொடித்த பிஸ்கட் தூள், சாக்லேட் பவுடர், தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
ஒரு நான்ஸ்டிக் பாத்திரத்தை அடுப்பில் அதில் கலந்து வைத்துள்ள பிஸ்கட் கலவையை சேர்த்து அதனுடன் கன்டன்ஸ்டு மில்க், உருக்கிய வெண்ணெய், வென்னிலா எசன்ஸ், பால் சேர்த்து நன்றாக கலந்து அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்றாக கிளறிக்கொண்டே இருக்கவும்.
இந்த கலவை நன்றாக சுருண்டு பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போது இறக்கி ஆறவிடவும்.
ஆறிய மாவை சிறிய உருண்டைகளாக பிடித்து தேங்காய் துருவலில் பிரட்டி வைக்கவும்.
இதை பிரிட்ஜில் வைத்து செட் ஆனவுடன் எடுத்து பரிமாறவும். அருமையான சாக்லேட் தேங்காய் பால்ஸ் ரெடி.
இதை பிரிட்ஜில் ஒரு வாரம் வரை வைத்திருந்து சாப்பிடலாம்.