சித்ராவை ஹேமந்த் கடித்து குதறி வைத்தார்? நண்பர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்கள்
நடிகையான சித்ராவை அவரது கணவர் ஹேமந்த் பாடாய் படுத்திய அதிர்ச்சித் தகவல்கள் நெருங்கிய நண்பர் மூலம் வெளியாகி வருகிறது. சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அன்று இரவு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சித்ராவுக்கு ஜோடியாக நடித்த நடிகருடன் சேர்த்து வைத்து ஆபாசமாக பேசியதை ஹேமந்த் ஏற்கனவே போலீசாரிடம் ஒப்புக்கொண்டார்.
இந்நிலையில் ஹேமந்தின் நண்பரான ரோஹித், ஹேமந்த்தான் சித்ரா தற்கொலைக்கு காரணம் என்றும் அவருக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தும் சென்னை உயர்நீதிமன்றத்தில் இடையீட்டு மனுத்தாக்கல் செய்தார். அதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு பேட்டியளித்து வருகிறார் ரோஹித்.
தானும் ஹேமந்தும் 10 வருடங்களுக்கு மேலாய் நண்பர்களாய் இருந்து வருவதாய் கூறிய அவர், சித்ரா மரணம் குறித்து பல திடுக்கிடும் தகவல்களை கூறி வருகிறார். அந்த வகையில் சித்ராவை ஹேமந்த் கடித்து குதறி வைத்தார் என்றும் சந்தேகப்பட்டு பல டார்ச்சர்களை கொடுத்தார் என்றும் கூறினார்.
மேலும் சித்ராவுக்கு கன்னித்தன்மை பரிசோதனை செய்ய வேண்டும் என்று மருத்துவரான தனது மனைவியிடம் கேட்டார் என்றும் தனது அப்பார்ட் மென்ட்டில் உள்ள மருத்துவர் ஒருவரிடமும் சித்ராவுக்கு கன்னித்தன்மை பரிசோதனை செய்ய வேண்டும் என்று ஹேமந்த் கேட்டார் என்றும் கூறினார்.