மறைந்த சித்ரா தற்கொலை வழக்கில் அடுத்த பகீர் திருப்பம்; நகங்கள் ஆய்வுக்கு அனுப்பி வைப்பு!
பிரபல சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணம் இந்திய திரையுலகையே அதிர்ச்சியுள்ளாகி இருந்தது. தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் ஹேமந்தை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், திருமணமான ஓராண்டுக்குள் சித்ரா இறந்துவிட்டதால் ஆர்டிஓ விசாரணை நடந்தது. இது குறித்து விசாரித்த ஆர்.டி.ஓ சித்ரா தற்கொலை செய்து கொள்ள வரதட்சணை காரணம் இல்லை எனவும் ஆனால் இன்னொரு காரணம் இருக்கக்கூடும் என்று தெரிவித்தார்.
அதன் பின்னர், சித்ராவின் மரணம் தற்கொலை தான் என நிபுணர் குழு அறிக்கை சமர்பித்துள்ளது. இந்நிலையில், ஹேம்நாத் ஜாமீன் கோரிய வழக்கில், சித்ராவின் நகங்கள் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், ஆய்வு முடிவுகள் ஒரு வாரத்தில் தெரியவருவதால் விசாரணையை தள்ளி வைக்கவேண்டும் என உயர்நீதிமன்றத்தில் சென்னை மத்திய குற்றப்பிரிவு கோரிக்கை விடுத்தது.
இதனை ஏற்று, வரும் 11-ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைக்க உயர்நீதிமன்றம் உத்ரவிட்டுள்ளது.