செல்ல மகளின் திடீர் மரணம்! பிறந்தநாளில் பாடகி சித்ராவின் உருக்கமான பதிவு
பிரபல திரைப்பட பின்னணி பாடகி சித்ரா மகள் நந்தனாவின் பிறந்தநாளான இன்று அவர் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.
பாடகி சித்ரா மகள்
தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் பல பாடல்களை பாடியுள்ளவர் கே.எஸ்.சித்ரா (59).
சித்ரா மற்றும் அவரது கணவர் விஜயசங்கருக்கு நந்தனா (8) என்ற மகள் இருந்தார்.
நந்தனா மரபணு கோளாறால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த 2011ல் டுபாயில் நீச்சல் குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தார், ஒரே மகளை பறிகொடுத்த அதிர்ச்சியில் இருந்து சித்ரா மீண்டு வர பல நாட்கள் ஆனது.
— K S Chithra (@KSChithra) December 18, 2022
டுவிட்டரில் உருக்கம்
இன்று நந்தனாவின் பிறந்தநாள் ஆகும். இதையடுத்து சித்ரா டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், சொர்க்கத்தில் தேவதைகளுடன் பிறந்தநாள் கொண்டுகிறாய்.
நீ என்னை விட்டு பிரிந்தாலும் பாதுகாப்பாக இருப்பாய் என அறிவேன். இன்றைய நாள் உன்னை கூடுதலாக நேசிப்பதோடு, மிகவும் மிஸ் செய்கிறேன் என பதிவிட்டுள்ளார்.