சித்ராவின் தாயுக்கு உடன்பாடில்லை.. நீதிமன்றத்தில் கொதித்தெழுந்த ஹேம்நாத்தின் மனு தாக்கலில் கூறியது என்ன?
சின்னத்திரை நடிகையான சித்ரா கடந்த மாதம் 9-ந் தேதி பூந்தமல்லி அருகே உள்ள நசரத்பேட்டையில் ஒரு தனியார் விடுதியில் தங்கி இருந்தபோது, பூட்டிய அறைக்குள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்த வழக்கு தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதனால், அவரது கணவர் ஹேம்நாத்(31) செய்த சித்ரவதை தாங்காமல் தான், சித்ரா தற்கொலை முடிவை எடுத்ததாக கூறப்பட்டது. இதனால் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் ஹேம்நாத் மீது பல்வேறு புகார்கள் கூறப்பட்டன. இதனிடையே, சித்ராவின் கணவர் ஹேமந்த் தற்போது சித்ரா தற்கொலை வழக்கில் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார்.
அதில், அவர் தனது ஜாமீன் மனுவில் கூறியிருப்பதாவது; சின்னத்திரையில் நடிக்ககூடாதென கூறியதால் தான் தன் மனைவி தற்கொலை செய்துகொண்டதாக காவல் துறை என் மீது குற்றம் சாட்டியுள்ளது. அது முற்றிலும் பொய்.
நாங்கள் கடந்த ஆகஸ்டில் திருமணம் செய்துகொண்டோம். நிச்சயதார்த்தத்துக்கு ரூ. 20 லட்சம் செலவழித்துள்ளேன்.
மேலும், சித்ராவுக்கு 35 சவரன் நகைகளை போட்டுள்ளேன். காதலித்தது முதல் பதிவு திருமணம் செய்துகொண்டது வரை சித்ரா தனது குடும்பத்துடன் மகளை போல நெருங்கி பழகி வந்தார். அது சித்ராவின் தாயாருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. ஆரம்பத்தில் இருந்தே சித்ராவின் தாயாருக்கு எங்கள் திருமணத்தில் உடன்பாடில்லை.
எனக்கும், சித்ராவுக்கு தனிப்பட்ட முறையில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை.எந்த குற்றமும் நான் இழைக்கவில்லை ஆகையால் எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என ஆதங்கத்துடன் ஹேம்ந்தாத் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, சித்ராவின் ஜாமீன் மனுவுக்கு எதிராக வழக்குத் தொடரப்போவதாக சித்ராவின் தாயார் கூறியிருக்கும் நிலையில் இந்த வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீசாரை எதிர் மனுதாரராக சேர்த்த நீதிபதி, சித்ரா கணவர் ஹேமந்த் ஜாமீன் மனு தொடர்பாக பதில் அளிக்க ஜனவரி 18ம் தேதி வரை அவகாசம் கொடுத்துள்ளார்.