கழுத்தில் துணிமாட்டியதும் துடிதுடித்தார்.. சித்ராவின் மரணத்தில் அடுத்த புதிய திருப்பம்.. வெளியான பகீர் தகவல்
சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலைக்கு இன்று வரை ஒரு சரியான முடிவு தெரியாமலே இருந்து வருகிறது. மேலும், சித்ராவின் மரணத்தில் கணவர் ஹேமந்த்தையே முன்னிறுத்தி குற்றஞ்சாட்டப்பட்டு வரும் நிலையில், அதற்கேற்ப சில சந்தேகங்களுக்கு நமக்கு விடையே கிடைக்காமல் உள்ளது.
இதனிடையே, சித்ரா தரப்பு நண்பர்கள், தோழிகள், உதவியாளர்கள் என பலரும் தினம் தினம் ஒரு தகவல்களை தெரிவித்து வருவதால், இந்த வழக்கின் போக்கு சரியான திசையில்தான் செல்கிறதா என்ற குழப்பமும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், சித்ராவின் உடல் ஏற்கனவே போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டுவிட்ட நிலையில், போஸ்ட் மார்ட்டம் செய்த மெடிக்கல் டீமில் இருந்த சிலர் ஒரு தனியார் செய்தி புலனாய்வு நிறுவனத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலில், “சித்ரா மரணத்துக்கு பிறகு 2-வது நாளில் அந்த ரூமுக்குள் சென்றோம்.. ஆய்வு செய்தோம். சித்ரா தற்கொலைதான் செய்து கொண்டிருக்கிறார். அவரது கழுத்தின் முன்புறத்தில் தழும்புகள் இல்லை.. ஆனால், கழுத்தின் பின்பக்கம் அந்த துணியை இறுக்கப்பட்டதற்கான காயங்கள் இருந்தன.
அவர் கழுத்தில் சுருக்கு மாட்டி கொண்டபிறகு துடிதுடித்துள்ளார். அந்த சமயம், தன்னை விடுவிக்கவும் முயற்சித்திருக்கலாம்..
அதனால்தான் அந்த நகங்கள் அவரது முகத்தை கிழித்து உள்ளன” என்று கூறியுள்ளனர்.