அங்கே இரத்தம் இருந்தது... கத்தியினால்.. நான் மிகவும் கஷ்டப்பட்டேன்! பரபரப்பை கிளப்பிய சித்ராவின் ஆவி : கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்
நடிகை சித்ராவின் மரணத்தில் பல சந்தேகங்கள் இருக்கின்றது என்றும், முக்கியமாக தைரியமான பெண்ணான அவர் தற்கொலை செய்திருக்க வாய்ப்பே இல்லை என்றும் பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் வெளிநாட்டில் ஆவிகளுடன் பேசும் நிபுணர் ஒருவர் சித்ராவின் ஆவியுடன் தற்போது உரையாடியுள்ளார். ஏற்கனவே நடிகர் சுஷாந்த் மரணத்தில் சந்தேகம் இருந்த போதிலும் இது போன்று நடந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சித்ராவிடம் பேசிய அவர் உங்கள் மரணத்திற்கான காரணம் என்னவென்று கேட்க, அதற்கு சித்ராவின் ஆவி சொல்லியதாக "என்னால் சொல்ல முடியாது. மிகவும் மோசமானது.
அவங்க வந்தாங்க. நான் தனிமையாக உணர்கிறேன். எனக்கு அன்பு வேண்டும்" என்று கூறியுள்ளார். அதற்கு மேல் ரசிகர்களுக்கு ஏதாவது சொல்ல வேண்டுமா என்று கேட்டபொழுது "எல்லாம் முடிந்துவிட்டது" என்று சித்ராவின் ஆவி கூறியுள்ளாதாக அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் மீண்டும் சித்ராவின் ஆவியுடன் பேசுங்கள் என்று பலரும் கோரிக்கை வைத்ததை அடுத்து, சார்லி மீண்டும் சித்ராவின் ஆவியுடன் பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பேசிய குரல் ஆணின் குரல் போன்று இருந்துள்ளது.
அந்த குரல் கூறும்போது "அங்கே இரத்தம் இருந்தது" என்று கூறுகிறது . எப்படி காயம் வந்தது என்று கேட்க "கத்தியினால்.. நான் மிகவும் கஷ்டப்பட்டேன்" என்று கூறியுள்ளார். மேலும் உங்களை கொன்றவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்ற கேள்விக்கு "இன்றைக்கு பேசுவேன்" என்றும் நான் சித்ரா" என்றும் பதிலளித்ததாக தெரிகிறது.
பலரும் இது எல்லாம் உண்மை இலை என்று மறுத்தாலும் சித்ராவின் தீவிர ரசிகர்கள் சித்ரா தான் பேசுகிறார் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.