7 அடி வரை தலைமுடி நீளமாக வளர்க்கும் பெண்கள்: முடியை பராமரிக்க என்ன செய்கிறார்கள்?
உலகத்தில் ஒரு நாட்டில் மட்டும் பாரம்பரியத்திற்காக தலைமுடியை நீளமாக வளர்க்கும் பெண்கள் தங்களின் முடி பராமரிப்பிற்கு என்ன செய்கிறார்கள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
நீளமாக முடி வளர்க்கும் பெண்கள்
பெண்கள் என்றால் யாருக்கதான் தலைமுடியை நீளமாக வளர்க்க ஆசை இருக்காது. ஆனால் தற்போது இருக்கும் வேலையின் அதிகரிப்பால் ஒவ்வொரு பெண்களும் கட்டையாக முடி இருக்க ஆசைப்படுகிறார்கள்.
இது தவிர இயற்கை பொருட்களை கொண்டு முடியை பராமரிப்பதை அனைத்து பெண்களும் மறந்து விட்டார்கள். இதனாலேயே சந்தையில் இரசாயன பொருட்களின் பயன்பாடு அதிகமாக காணப்படுகின்றது.
ஆனால் இந்த காலத்திலும் சீனாவின் குவாங்சி ஜுவாங்கின் ஹுவாங்லுவோ கிராமத்தைச் சேர்ந்த ரெட் யாவ் பெண்கள் தலைமடிக்கு பலத்த முக்கியத்தவத்தை கொடுக்கின்றனர்.
இந்த பெண்கள் தங்கள் தலைமுடியை கிட்டத்தட்ட ஆறு அடி நீளமாக வளர்க்கிறார்கள். இப்படி இவர்கள் முடியை வளர்ப்பதற்கு அதிகமான கவனிப்பை செய்கிறார்கள். இந்த பெண்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே வெட்டுவார்கள் என கூறப்படுகின்றது.
இதனாலேயே ஆறு அல்லது ஏழு அடி நீளம் வரை தங்கள் தலைமுடியை வளர்க்கும் பாரம்பரியம் கொண்டவர்கள் என அழைக்கப்படுகிறனர். இவர்கள் தங்களின் 18வது பிறந்தநாளில் மட்டுமே முடிவை வெட்டுகின்றனர்.
இந்த நீண்ட முடியின் மூலம் பாரம்பரியம், சமூகத்திற்கு நீண்ட ஆயுளையும் செழிப்பையும் தருவதாக நம்பப்படுகிறது. இந்த முடி கருகரு எனறு நீளமாக இருக்க ஒரு பாரம்பரிய பராமரிப்பு முறையும் பின்பற்றுகிறார்கள்.
இவர்கள் கடைகளில் ஷாம்பு வாங்கி பயன்படுத்துவதற்கு பதிலாக இயற்கையாகவே ஷாம்பு செய்த பயன்படத்துகின்றனர். இந்த பராமரிப்பில் அரிசி நீர், மூலிகைகள், பொமலோ தோல்கள் மற்றும் தேநீர் தவிடு உள்ளிட்ட முக்கிய மூலப்பொருட்கள் உள்ளடங்கும்.
அரிசி நீரை கொதிக்க வைத்து கிளென்சரைத் தயாரிக்கிறார்கள்.
பின்னர் அவர்கள் ஒரு பாரம்பரிய மர சீப்பைப் பயன்படுத்தி இந்த கலவையை உச்சந்தலையில் இருந்து கீழ் வரை அப்ளை செய்து குளிக்கிறார்கள். இந்த பராமரிப்பு தான் இவர்களின் முடியை நிளமாக வளர்க்க உதவுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |