தீடிரென வந்த மனைவி.. 10-ஆவது மாடியில் தொங்கிய காதலி- படபடக்க வைத்த video
காதலன் காண சென்ற பெண் அவருடைய மனைவிக்கு பயந்து 10-ஆவது மாடியில் தொங்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சமீபக் காலமாக திருமணத்தை மீறிய உறவுகள் அதிகரித்து வருகிறது.
தினம் தினம் திருமணத்தை மீறிய உறவில் இருப்பவர்களால் வரும் பிரச்சினைகளே செய்திகளில் அதிகம்.
அந்த வகையில் சீனாவை சேர்ந்த பெண்ணொருவர் அடுக்கு மாடிக் கட்டிடத்தில் ஒரு வீட்டின் ஜன்னலில் தொங்கிய படி காத்திருக்கிறார்.
மனைவியால் வந்த ஆபத்து
அப்போது யதார்த்தமாக உள்ளே இருந்து ஒரு ஆண் வந்து, குறித்த பெண்ணிடம் கதைக்கிறார். மீண்டும் உள்ளே சென்று விடுகிறார். காதலனை பார்த்த பெண் அவர் இருக்கும் இடத்தில் செல்வதற்கு விளிம்பில் தவித்தப்படி தடுமாறிக் கொண்டிருக்கிறார்.

அதன் பின்னர், மெதுவாக பக்கத்தில் இருந்த தண்ணீர் குழாயை பிடித்தவாறு கீழே இறங்க முயற்சிக்கிறார். ஆனாலும் அவருடைய கை, கால்கள் அதற்கு ஏதுவாக இல்லை. இதனால் உதவிக்கா அவர் தொங்கி கொண்டிருந்த மாடியின் வீட்டு ஜன்னலை தட்டுகிறார்.
உள்ளே இருந்து வந்த ஒருவரை பெண்ணை காப்பாற்றி வீட்டிற்குள் இழுக்கிறார்.
இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தன. இது குறித்து தேடிய பொழுது ஆணின் மனைவி வீட்டிற்கு வந்த காரணத்தினால் அவருடைய காதலியை ஜன்னலில் இருந்து தக்களி விட்டதாக கூறப்படுகிறது.
தன்னுடைய உயிரை பொருட்ப்படுத்தாமல் காதலியும் இப்படி நடந்து கொண்ட விதம் இணையவாசிகள் மத்தியில் விமர்சனங்களை கிளப்பியது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |