சீன உணவகத்தில் தவளை பீட்சா- பார்த்தவுடன் மெய்சிலிர்த்து போன நெட்டிசன்கள்
சீனாவில் தவளையை வைத்து பீட்சா செய்யும் புகைப்படமொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
தவளை பீட்சா
சமீபக்காலமாக வித்தியாசமான உணவு வகைகள் தயாரிப்பு குறித்து பல வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகின்றன.
அவற்றில் சில உணவுகள் மக்கள் மத்தியில் அதிகமான வரவேற்பை பெற்றுள்ளன. அந்த வகையில் சீன உணவகம் ஒன்றில் தவளை கறியுடன் பீட்சா செய்து விற்பனைக்கு வைக்கப்பட்ட புகைப்படமொன்று டுவிட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது.
குறித்த உணவகத்தில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த பீட்சா நடுவில் பொரித்த தவளை வைக்கப்பட்டுள்ளது.
அதன் பக்கத்தில் அவித்து இரண்டு துண்டுகளாக வெட்டப்பட்ட முட்டையும் தவளையின் கண்களும் அலங்காரத்திற்காக வைக்கப்பட்டுள்ளன.
இந்த புகைப்படத்தை பார்த்த இணையவாசிகள், “பீட்சாவுக்கு உரிய மரியாதையே போய்விட்டது..”என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |