அசிங்கமாக மெசேஜ் அனுப்பிய மேனேஜர்! துடைக்கும் கட்டையால் அடித்து துவம்சம் செய்த பெண்! வைரல் வீடியோ
வடகிழக்கு சீனாவை சேர்ந்த ஒரு அரசு ஊழியர், தனது அலுவலக உயர் மேலாளரை துடைக்கும் கட்டையால் அடித்துள்ளார்.
வடக்கிழக்கு சீனாவில் ஒரு அரசாங்க அலுவலக ஊழியர் தனது முதலாளி துன்புறுத்தியதை அடுத்து சோர்வடைந்து அவரை துடைப்பத்தால் அடித்துள்ளார்.
மேலும் புத்தகங்களையும் தண்ணீரையும் அவர் மேல் வீசியுள்ளார். அந்த முதலாளி அந்த பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக கூறப்படுகிறது.
14 நிமிடம் உள்ள இந்த வீடியோ தற்சமயம் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இதனால் அந்த முதலாளி வேலையில் இருந்து நீக்கப்பட்டார்.
அந்த பெண்ணின் இறுதி பெயர் ஜாவ் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
அந்த வீடியோவின் முடிவில் அவர் தனது முதலாளியின் கணினியை கவிழ்ப்பதை காணலாம். கடந்த வாரம் அந்த பெண் போலீசில் அறிக்கை தாக்கல் செய்த நிலையில் இந்த வீடியோ மில்லியன் கணக்கான பார்வைகளை பெற்றுள்ளது.