சீனாவுக்கு அடித்த புது ஜாக்போட்- தங்கச் சுரங்கத்தின் மதிப்பு எவ்வளவு, எங்குள்ளது தெரியுமா?
பொதுவாக தற்போது இருக்கும் பொருளாதாரா வீழ்ச்சி காரணமாக சமீபக் காலமாக தங்கவிலை சந்தையில் அதிகரித்து வருகின்றது.
இதன்படி, சீனாவுக்கு புது தங்க சுரங்கம் ஒன்று கிடைத்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
சீனா எதிர்காலத்திற்கான வளங்களைப் பாதுகாப்பதில் தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வரும் வேளையில் இப்படியொரு ஜாக்போட் கிடைத்தது அதிர்ஷ்டமாக பார்க்கப்படுகின்றது.
இவ்வளவு முன்னேற்றத்திற்கு காரணமான தங்க சுரங்கம் ஹுனான் மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தான் சீனாவின் பொருளாதாரத்தில் பெரிய பங்கு வகிப்பதாக வணிகர்கள் கூறுகிறார்கள்.
உலக பொருளாதாரத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்திய தங்க சுரங்கம் பற்றி முழு விவரங்களை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
ஹுனானில் தங்கச் சுரங்கம் கண்டுபிடிப்பு
ஹுனான் மாகாணத்தில் அமைந்துள்ள பிங்ஜியாங் கவுண்டியில், வாங்கு சுரங்கத்தில் தங்கம் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது என நிபுணர்கள் கூறுகிறார்கள்.
இந்த சுரங்கத்தில் 1,000 டன் தங்கம் மறைந்திருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. சவுத் சைனா மார்னிங் போஸ்ட் படி, இந்த தங்கத்தின் மொத்த மதிப்பு சுமார் 600 பில்லியன் யுவான், இந்திய மதிப்பில் சுமார் 7 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.
ஊடக அறிக்கையின் படி, இந்த தங்க சுரங்கம் ஆழமாக, நிலத்தடியில் அமைந்துள்ளது, மாறாக இந்த சுரங்கம் சீனாவின் மிக முக்கியமான தங்க ஆதாரங்களில் ஒன்றாக மாறும் என நம்பப்படுகிறது.
இயற்கை வளங்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் நாடுகளில் ஒன்றான சீனாவிற்கு இது கொடையாக கொடுக்கப்பட்டுள்ளது என அங்குள்ள மக்கள் நம்புகிறார்கள். சீன நாட்டின் பொருளாதாரத்தில் பெரிய பங்கு இந்த சுரங்கத்திற்கு உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
தங்க சுரங்கம் எவ்வாறு உருவாகிறது?
புவியியலாளர்களின் தகவலின் படி, தாதுக்கள் நிறைந்த திரவங்கள் புவியிலுள்ள விரிசல்கள் வழியாக நகர்ந்து சுற்றியுள்ள பாறைகளில் தங்கத்தை குவிக்கிறது. வெப்பநிலை அல்லது அழுத்தம் மாறும் பொழுது தங்க விரிசல் உருவாகிறது. இந்த மாற்றம் ஏற்பட பல மில்லியன் கணக்கான ஆண்டுகள் தேவைப்படும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |