chicken gravy: ஆந்திரா பாணியில் காரசாரமான சிக்கன் கிரேவி...
தென்னிந்திய உணவுகளில் சிக்கன் குழம்புக்கு தனித்துவமான மணம் மற்றும் சுவை காணப்படுகின்றது.
அதிலும் ஆந்திரா பாணியில் செய்யப்படும் காரசாரமான வெங்காய சிக்கன் கிரேவிக்கு அடிமையாகாதவர்கள் இருக்கவே முடியாது என்கின்ற அளவுக்கு சுவை அசத்தலாக இருக்கும். எளிமையான முறையில் எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கோழி - 500 கிராம்
வெங்காயம் - 2 கப் (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1 கப் (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது - 1 தே.கரண்டி
பச்சை மிளகாய் - 5
தயிர் - 1 கப்
மிளகாய் - 1/2 தேக்கரண்டி
எண்ணெய்- தேவையான அளவு
உப்பு- தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் விட்டு சூடானதும், நறுக்கிய வெங்காயத்தைப் போட்’டு பொன்நிறமாக மாறும் வரையில் நன்றாக வதக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் தக்காளி ,இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து தக்காளி மென்மையாக மாறும் பதத்திற்கு நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதற்கிடையில் மற்றொரு பாத்திரத்தில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
நன்றாக வதங்கியதும் சிக்கன் துண்டுகளை எடுத்து முன்னர் வதக்கிய பொருட்களுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து நன்றாக கிளறிவிட்டு வதக்கிக்கொள்ள வேண்டும். பின்னர் அதனுடன் தயிர் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கலந்துவிட்டு கெட்டியாகும் வரை கொதிக்க விட்டு இறக்கினால் அவ்வளவு தான் அட்டகாசமான சுவையில் காரசாரமான வெங்காய சிக்கன் கிரேவி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |