நாவுக்கு விருந்தாகும் Chilli Garlic Noodles
வித்தியாச வித்தியாசமாக உண்பதற்கு யாருக்குத்தான் பிடிக்காது.
அந்த வகையில் இந்த குறிப்பில் சில்லி கார்லிக் நூடுல்ஸ் எவ்வாறு செய்யலாம் எனப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
நூடுல்ஸ் - 1/2 கப்
கேரட் - 1/2 கப்
நறுக்கிய வெங்காயம் - 1/2 கப்
குடைமிளகாய் - 1
கொத்தமல்லி - சிறிதளவு
இஞ்சி, வெள்ளைப் பூண்டு, பச்சை மிளகாய் விழுது - 1 மேசைக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

image - whiskaffair
செய்முறை
முதலில் நூடுல்ஸை உதிரியாக வேகவைத்துக் கொள்ளவும். பின்னர் கேரட் மற்றும் குடைமிளகாயை நீளமாக மெலிதாக வெட்டிக் கொள்ளவும்.
கொத்தமல்லியை பொடியாக நறுக்கவும். அதன்பின்னர் கடாயில் எண்ணெய்விட்டு, அதில் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் அதில் இஞ்சி, வெள்ளைப்பூண்டு, பச்சை மிளகாய் விழுது, உப்பு சேர்த்து கிளறவும்.
அதனுடன் குடைமிளகாய், கேரட் என்பவற்றை சேர்த்து வதக்கிக் கொள்ளவும். அனைத்தும் நன்றாக வதங்கியதும், வேக வைத்த நூடுல்ஸை அதனுடன் போட்டு கலக்கவும்.
அதன் பின்னர் மசாலா அனைத்தும் ஒன்று சேர்ந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும்.
அருமையான சில்லி கார்லிக் நூடுல்ஸ் ரெடி.

image - chef kunal kapur