சினிமாத்துறையிலிருந்து விலகிய பிரபலங்களின் பிள்ளைகள்! இப்போ என்ன பண்ணுறாங்கனு தெரியுமா?
சினிமாவில் இருந்து விலகி வேறு வழியில் சாதித்த பிரபலங்களின் பிள்ளைகளின் விபரங்கள் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
பிரபலங்களின் பிள்ளைகள்
பிள்ளைகள் தங்களின் வாழ்க்கையை அமைத்து கொள்ள ஆரம்பிக்கும் போது பெரும்பாலான பிள்ளைகள் தங்களின் தாய் தந்தையை பின்பற்றி தான் வருவார்கள்.
அந்த வகையில் சினமைாத்துறையில் எத்தனையோ பிரபலங்களின் பிள்ளைகள் தங்களின் பெற்றோர்களின் வழியை பின்பற்றி இருந்தாலும் இன்னும் சில நடிகர்களின் பிள்ளைகள் தங்களின் பெற்றோர்களின் வழியை பின்பற்றாமல் வேறு வழிகளில் சாதித்து வருகின்றனர்.
அவ்வாறான பிரபலங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
அடேங்கப்பா.. சினிமாவுக்கு எண்ட் கார்டு போட்ட விஜய்- கடைசி படத்திற்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
1.நடிகர் மாதவன் - மகன் வேதாந்த்
மாதவன் தமிழ் சினிமாவில் நடித்து இருந்தாலும் பெரிதாக அறிமுகம் இல்லாதவர். தற்போது பாலிவுட் கோலிவுட் படங்களில் பிஸியாக இருக்கிறார் மாதவன். அவரது மகன் வேதாந்திற்கு சினிமாத்துறையில் அவ்வளவாஎ ஆர்வம் இல்லை. இதனால் அவர் நீச்சல் துறையில் பல சாதனைகளைப் புரிந்து வருகிறார். மஹாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் இவர் ஐந்து தங்கம், இரண்டு வெள்ளிப் பதக்கங்கள் வென்று வெற்றி வாகை சூடியுள்ளார்.
2.சின்னி ஜெயந்த் மகன் -சுதன் ஜெய்நாராயணன்
இவர் தமிழ் சினிமாவின் பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அவரது மகன் சுதன் ஜெய்நாரயணன். தனது தந்தையை போல சினிமாவில் நுழையாமல் நன்றாக படித்து திருப்பூரில் சப் கலெக்டராக பணியாற்றி வருகிறார். இந்திய அளவில் நடந்த யுபிஎஸ்சி தேர்வில் இவர் 75-வது இடத்தை பிடித்துள்ளார்.
3.தலைவாசல் விஜய்- மகள் ஜெயவீணா
சினிமாவில் நகைச்சுவை நடிகர், குணச்சித்திர நடிகர் மற்றும் வில்லனாக நடித்துள்ளார் தலைவாசல் விஜய். அவரது மகள் ஜெய வீணா சினிமாத்துறையில் ஆர்வம் காட்டாமல் நீச்சல் துறையில் சாதித்து வருகிறார். இவர் பல தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வெள்ளி பதக்கங்களைப் பெற்றுள்ளார்.
4.இயக்குநர் மணி ரத்னம்- மகன் நந்தன்
பட இயக்குனர் மணிரத்தினத்தை அறியாதவர்கள் இல்லை. தமிழ் சினிமாவில் இவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அவரது மனைவி நடிகை மற்றும் இயக்குனரான சுஹாசினி ஆவார். இவர்களுக்கு நந்தன் என்ற ஒரு மகன் உள்ளார். இவருக்கு சினிமாவில் ஆர்வம் இல்லை என்றாலும் அரசியலில் ஆர்வம் காட்டி வருகிறார். நந்தன் சிபிஎம் கட்சியின் உறுப்பினராக உள்ளார்.
5.உதயநிதி - மகன் இன்பநிதி
உதயநிதி நடிகர் மடடுமல்லாமல் தற்போது அமைச்சராக உள்ளார். அவரது மகன் இன்பநிதி கால்பந்து விளையாடுவதில் தேர்ந்தவர். பல விளையாட்டுக்களில் பங்கேற்று சாதனை படைத்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |