Viral Video: அம்மாவை அடிக்க வேண்டாம்! அப்பாவை சரமாரியாக வெளுத்து வாங்கிய மகள்
அம்மாவை அடிக்க வேண்டாம் எனக் கூறி குழந்தையொன்று அப்பாவை வெளுத்து வாங்கும் காட்சி இணையவாசிகளை மிரள வைத்துள்ளது.
குழந்தைகளின் சேட்டைகள்
தற்போது இருக்கும் குழந்தைகள் வீட்டிலுள்ளவர்களை மிரட்டி அதற்கு தேவையானவைகளை பெற்று கொள்கிறது.
குழந்தைகள் கேட்டது கிடைக்காத பட்சத்தில் அம்மா அல்லது அப்பாவை அடிக்க ஆரம்பிக்கின்றார்கள்.
இதனை ரசிக்கும் வகையில் பெற்றோர்களும் அவர்களை ஒன்றும் கூறாமல் அப்படியே இருந்து விடுகிறார்கள். இந்த செயல் அவர்கள் ஒரு வயதிற்கு வரும் வரை தொடர்கிறது, இன்னும் சிலர் அதனை பெரிதாக கண்டு கொள்ள மாட்டார்கள்.
அப்பாவை வெளுத்து வாங்கும் குழந்தை
இதன்படி, தன்னுடைய அப்பா அம்மாவை, விளையாட்டாக அடிக்கிறார், இதனை பொறுக்க முடியாமல் அழகிய பெண் குழந்தையொன்று அப்பாவை மழலை மொழியில் ஏசுகிறது.
பின்னரும் அப்பா அம்மாவை அடிக்கும் போது கோபத்தில் குழந்தையை அடித்து மிரட்டுகிறது. இந்த காட்சி பார்ப்பதற்கு அதிர்ச்சியாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கிறது.
இந்த வீடியோ காட்சியை giedde Mammi என்ற இன்ஸ்டா பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள், “குழந்தையின் செயலை பார்த்து வியக்கிறேன்.” என கமண்ட் செய்து வருகிறார்கள்.