Smoke பிஸ்கெட் சாப்பிட்டதும் மயங்கிய சிறுவன்! பதற வைக்கும் காணொளி
Smoke பிஸ்கெட் சாப்பிட்ட சிறுவன் ஒருவர் கதறி துடித்து மயங்கிய காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Smoke பிஸ்கெட்
தற்போது நாடு முழுவதும் பல வித்தியாசமான உணவு வகைகள் ட்ரெண்டாகி வருகின்றது. சில வகை உணவுகள் உயிருக்கு ஆபத்தாகவும் அமைந்துவிடுகின்றது.
சமீபத்தில் ஷவர்மா சாப்பிட்டு குழந்தைகள், இளம்பெண் என பலியான நிலையில், இதுகுறித்து ஆய்வு செய்த போது பல கெட்டுப்போன சிக்கன்களை கண்டறிந்து அதிகாரிகள் அகற்றினர்.
பஞ்சு மிட்டாயில் கலக்கும் நிறம் புற்றுநோயை ஏற்படுத்தும் என்பதை கண்டறிந்து ரசாயனம் சேர்ப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில் சிறுவர்களிடையே பிரபலமாக உள்ள ஸ்மோக் பிஸ்கெட்டும் சர்ச்சைக்குள்ளாகி வருகிறது.
திரவ நைட்ரஜனில் முக்கி எடுத்து வாயில் போடப்படும் பிஸ்கட்டுகளில் இருந்து எழும் புகையை கண்டு சிறுவர்கள் பலரும் அந்த பிஸ்கட்டுகளை சுவைக்க விரும்புகின்றனர்.
சமீபமாக திருவிழாக் கடைகள், கண்காட்சிகளிலும் இந்த ஸ்மோக் பிஸ்கெட் ஸ்டால்களை காண முடிகிறது.
இந்நிலையில் தற்போது தமிழில் திரௌபதி, ருத்ர தாண்டவம் படங்களை இயக்கிய மோகன் ஜி தனது எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளார்.
இதில் சிறுவன் ஒருவன் குறித்த பிஸ்கெட்டை சாப்பிட்டுவிட்டு மூச்சுவிட முடியாமல் கதறியதுடன், மயங்கவும் செய்துள்ளான்.
அதிகப்படியான புகை வருவதால் குழந்தைகள் இதனை வாங்கி சாப்பிட அடம் பிடிக்கின்றனர். இதில் ஊற்றப்படும் #LiquidNitrogen.. ஒரு ஸ்பூன் உட்கொண்டால் கூட உயிருக்கு ஆபத்து.. தமிழக அரசு இதற்கு தடை விதிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
இது போன்று விற்கும் #SmokeBiscuit என்ற திண்பண்டத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும்.. குழந்தைகள் புகையை பார்த்து ஆசையாக சாப்பிட அடம் பிடிப்பார்கள்.. அதில் ஊற்றப்படுவது #LiquidNitrogen.. ஒரு ஸ்பூன் உட்கொண்டால் கூட உயிருக்கு ஆபத்து.. தமிழக அரச இதற்கு தடை விதிக்க வேண்டும் @CMOTamilnadu pic.twitter.com/Nel8I57h5A
— Mohan G Kshatriyan (@mohandreamer) April 21, 2024
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |