10 வயது சிறுமிக்கு தொல்லை கொடுத்த சொந்த தாத்தா; அதிர்ந்துபோன தாய் செய்த காரியம்
ஈரோடு மாவட்டத்தில் உள்ள விஜயமங்கலத்தை சேர்ந்த 32 வயது பெண்ணுக்கும், கோவை ஒண்டிபுதூரை சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் முடிந்து 2 பெண் குழந்தைகள் உள்ளன. இதனிடையே, கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் தனித்தனியாக வசித்து வருகின்றனர்.
இதனால் தனது 2 குழந்தைகளையும் மாமனார், மாமியார் பராமரிப்பில் அந்த பெண் வளர்த்து வந்தார்.
இந்நிலையில், அந்த குழந்தைகளில் 10 வயது சிறுமிக்கு சொந்த தாத்தாவான சுப்பிரமணியன் (72) பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இச்சம்பவம் அறிந்த தாய் அதிர்ந்துபோக உடனே மகளிர் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் விசாரணை நடத்தி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த
சுப்பிரமணியனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.