குழந்தைகள் விரும்பி உண்ணும் சிக்கன் நூடுல்ஸ் கட்லெட்: ஈஸியாக செய்வது எப்படி?
சிக்கன் நூடில்ஸ் கட்லெட் விருந்தினருக்கு ஏற்ற சிற்றுண்டியாகும்.இதனை குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அனைவருமே விரும்பி உண்பார்கள்.இதனை குழந்தைகளுக்கு மதிய உணவாகவும் செய்துக் கொடுக்கலாம்.
வேக வைத்த மொறு மொறுப்பான நூடில்ஸ் உடன் சிறிது சிறிதாக நறுக்கிய சிக்கன் துண்டுக்களை சேர்த்து இதனை செய்வதால் இதன் சுவை மிகவும் அருமையாக இருக்கும்.இதனை உருளைக் கிழங்கு கட்லெட் செய்வது போன்று செய்து பார்க்கலாம்.
இந்த சிக்கன் நூடில்ஸ் கட்லெட்டை எவ்வாறு செய்யலாம் என்பதை இப்போது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சிக்கன் - 200 கிராம்
நறுக்கிய வெங்காயம் - 4
துருவிய கேரட் - 1 கப்
வெங்காயத்தாள் - 1 கப்
நூடுல்ஸ் - 250 கிராம் (வேக வைத்தது)
முட்டைகோஸ் - 1 கப்
குடைமிளகாய் - 1 கப்
உப்பு - தேவையான அளவ
இஞ்சி - 1 தேக்கரண்டி
பூண்டு பேஸ்ட் - அரை தேக்கரண்டி
மிளகாய் பொடி - 1 தேக்கரண்டி
சோள மாவு - 3 தேக்கரண்டி
சோயா சாஸ் - 1 தேக்கரண்டி
பச்சைமிளகாய் சாஸ் - 1 தேக்கரண்டி
முட்டை - 1
செய்முறை
- கடாய் ஒன்றில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும். அவற்றுடன் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், வேகவைத்து சிக்கன் இவற்றினை சேர்த்தும் வதக்கவும்.
- பின்பு சில்லி சாஸ், சோயா சாஸ், உப்பு சேர்த்து அனைத்தையும் போட்டு கிளறிய பின்பு, முட்டைக்கோஸ், துருவிய கேரட், குடைமிளகாய் இவை அனைத்தையும் சேர்த்து வதக்கி அதில் வெங்காயத்தாளையும் சேர்க்கவும்.
- தண்ணீர் சேர்க்காமல் இவற்றினை நன்கு வதக்கி பின்பு முட்டையை உடைத்து ஊற்றவும். பின்பு வேக வைத்த நுடுல்ஸ் மற்றும் சோள மாவு மீண்டும் தேவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து நன்கு வதக்கி இறக்கவும்.
- பின்பு கட்லெட் போன்று தட்டி எண்ணெயை சூடு செய்து, எண்ணெய்யில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
- தற்போது குழந்தைகளுக்கு பிடித்த சுவையான சிக்கன் நூடுல்ஸ் கட்லெட் தயார்.