கொரோனாவால் அடுத்த பிரபல நடிகை அதிர்ச்சி மரணம்- இரங்கல் தெரிவிக்கும் பிரபலங்கள்
மராத்தி மற்றும் இந்திமொழி படங்களில் நடித்து வந்த அபிலாஷா பாட்டீல்(40). கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்தார்.
ஆனால் சிகிச்சை பலனின்றி தற்போது இறந்துள்ளார். இவரின் மறைவுக்கு மராத்தி சினி நட்சத்திரங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
மேலும், இதுகுறித்து சினி அண்ட் டிவி ஆர்ட்டிஸ்ட்ஸ் அசோசியேஷன் பொதுச் செயலாளர் (சிண்டா) பொதுச் செயலாளர் அமித் பெல் வெளியிட்ட தகவலில், கொரோனாவின் இரண்டாவது அலை பலரது விலைமதிப்பற்ற உயிர்களை எடுத்துக் கொண்டுள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பால் இறந்த ஸ்ரீபிரதா, எங்கள் சங்கத்தின் மூத்த உறுப்பினராக இருந்தார். இந்தி சினிமா மட்டுமில்லாமல் தென்னிந்திய படங்களிலும் நடித்துள்ளார்.
மூத்த நடிகையை நாங்கள் இழந்துள்ளோம். மிகவும் துரதிர்ஷ்டவசமான சம்பவம் இது. அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்.
இரண்டாவது அலையால் சினிமா தொழிலில் ஈடுபட்டு வரும் பலரது விலைமதிப்பற்ற உயிர்களை இழந்துள்ளோம் என்று தெரிவித்தார்.
