வெறும் வயிற்றில் கறிவேப்பிலை சாப்பிடுங்க... நம்பமுடியாத அதிசயத்தை காண்பீங்க
தினமும் காலை வெறும்வயிற்றில் கறிவேப்பிலை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
கறிவேப்பிலை
தென்னிந்தியா சமையலில் முக்கிய இடம் கறிவேப்பிலைக்கு உண்டு. பல மருத்துவ குணம் கொண்ட கறிவேப்பிலையில் பல சத்துக்கள் இருக்கின்றது.
கறிவேப்பிலை நமக்கு வயிற்றுப் பிரச்சனைகளிலிருந்து நல்ல நிவாரணம் அளிப்பதுடன், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகின்றது.
இதில் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் ஏராளமாக உள்ளதுடன், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது. கறிவேப்பிலையை பொடி அல்லது சட்னி செய்தும் சாப்பிடலாம்.
வெறும் வயிற்றில் கறிவேப்பிலை
கறிவேப்பிலையில் நார்ச்சத்து, ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளதால், இவை செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைக்க உதவுகின்றது.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் 5-7 கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படும்.
கறிவேப்பிலையில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால், இவை இதயத்தை ஆரோக்கியமாக வைக்க உதவுகின்றது.
கறிவேப்பிலையில் இருக்கும் பண்புகள் உச்சந்தலையில் ஏற்படும் பிரச்சனைகளை குறைத்து, ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றது.
கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளதால், இது கண் பார்வையை மேம்படுத்தும்.
உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க தினமும் காலையில் வெறும் வயிற்றில் கறிவேப்பிலையை சாப்பிட வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |