செட்டிநாடு பாலக்கீரை கூட்டு - 10 நிமிடத்தில் செய்வது எப்படி?
பொதுவாக வீடுகளில் ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது வழக்கமாக வைத்து கொள்ள வேண்டும். ஏனெனின் உடலின் வளர்ச்சிக்கு கால்சியம் சத்து அவசியமாகின்றது.
இந்த சத்து கீரை வகைகளில் முழுமையாக கிடைப்பதால் கீரை குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிட வேண்டும். அப்படியானால் பாலக்கீரை வாங்கி எப்படி செட்டிநாடு ஸ்டைலில் கூட்டு செய்யலாம்.
இந்த செட்டிநாடு பாலக்கீரை கூட்டு சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். அதிலும் குறிப்பாக கூட்டு என்றால் வீட்டிலுள்ளவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள்.
அந்த வகையில், ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுக்கும் செட்டிநாடு பாலக்கீரை எப்படி செய்யலாம் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
* பாசிப்பருப்பு - 50 கிராம்
* துவரம் பருப்பு - 50 கிராம்
* தக்காளி - 1 (நறுக்கியது)
* பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 8 பல் (தட்டிக் கொள்ளவும்)
* வரமிளகாய் - 2
* சாம்பார் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* பாலக் கீரை - 1 கட்டு (பொடியாக நறுக்கியது)
* தண்ணீர் - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
செட்டிநாடு பாலக்கீரை கூட்டு செய்வது எப்படி?
முதலில் குக்கரில் பாசிப்பருப்பு, துவரம் ஆகிய தானியங்களை நன்றாக கழுவி தனியாக எடுத்து வைக்கவும்.
பின்னர் அதில் தக்காளி, பெருங்காயத் தூள், மஞ்சள் தூள் மற்றும் பருப்பு மூழ்கும் அளவில் நீரை ஊற்றி குக்கரில் வேக வைக்கவும். வெந்தவுடன் பருப்பை நன்றாக மசித்து தனியாக பவுலில் ஊற்றி வைக்கவும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி விட்டு சூடானதும் கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும். அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதங்க விடவும். தேவை இருந்தால் பூண்டு பற்கள், வரமிளகாய் சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.
இதனை தொடர்ந்து, சாம்பார் தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதங்க விட்டு அதனுடன் நறுக்கி வைத்திருக்கும் பாலக்கீரையை சேர்க்கவும்.
சேர்த்த சுமாராக 2 நிமிடங்களில் வதங்கி விடும் அதில் பருப்பு சேர்த்து நன்றாக கிளறி விட்டு, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும். நன்றாக கொதித்து வந்தவுடன் செட்டிநாடு பாலக்கீரை கூட்டை சூடான சாதத்துடன் பரிமாறலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |