செட்டிநாடு எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு.., எப்படி செய்வது?
கத்திரிக்காய் உடல்நலத்திற்கு தேவையான பல சத்துகளை கொண்டுள்ளது.
இதில் வைட்டமின் சி, ஈ சத்துகள், இரும்புசத்து, பாஸ்பரஸ் போன்ற பல சத்துகள் உள்ளது.
கத்திரிக்காய் வைத்து செய்யப்படும் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பை அனைவரும் விரும்பி உண்ணுவார்கள்.

அந்தவகையில், சுவையான செட்டிநாடு எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கத்திரிக்காய்- 8
- எண்ணெய- ½ கப்
- கடுகு- ½ ஸ்பூன்
- வெந்தயம்- ¼ ஸ்பூன்
- சீரகம்- ½ ஸ்பூன்
- பெருங்காயத்தூள- ½ ஸ்பூன்
- சிறிய வெங்காயம்- 2 கப்
- பூண்டு- 6 பல்
- தக்காளி- 2
- மஞ்சள் தூள்- ¼ ஸ்பூன்
- மிளகாய் தூள்- 2 ஸ்பூன்
- மல்லி தூள்- 2 ஸ்பூன்
- புளிச்சாறு- ¼ கப்
- வெல்லம்- 1 ஸ்பூன்
- கறிவேப்பிலை- 1 கொத்து
- உப்பு- தேவையான அளவு
செய்முறை
முதலில் கத்திரிக்காயை காம்புடன் சேர்த்து குறுக்கே நாலு பாகங்களாக செட்டிக்கொள்ளவும்.
அடுத்து ஒரு தட்டில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், புளிச்சாறு, உப்பு, தண்ணீர் ஆகியவற்றை பேஸ்ட் போல் கலந்துக்கொள்ளவும்.
பின் இந்த பேஸ்ட்டை வெட்டிவைத்துள்ள கத்திரிக்காயின் உள்ளே தடவிக்கொள்ளவும்.
இதற்கடுத்து வாணலில் எண்ணெய் ஊற்றி மசாலா தடவிய கத்தரிக்காய்களை வறுத்து தனியே எடுத்து வைத்துக்கொள்ளவும்.
பின்னர் அதே கடாயில் கடுகு, வெந்தயம், சீரகம், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, சிறிய வெங்காயம் ஆகிவற்றை வதக்கவும்.
அடுத்து நசுக்கிய பூண்டு, நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கி பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், உப்பு, புளிச்சாறு, தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
கொதிகின்ற குழம்பில் வறுத்த கத்திரிக்காய்களை சேர்த்து பதினைந்து நிமிடத்திற்கு மூடியபோட்டு வேகவைக்கவும்.
இறுதியாக இதில் வெல்லம் சேர்த்து கலந்து இறக்கினால் செட்டிநாடு எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு தயார்