தியேட்டரில் அடி வாங்கிய விடுதலை பட நடிகர்! வெளியான தகவல்
நடிகர் சேத்தன் தியேட்டரில் அடி வாங்கிய தகவல் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகர் சூரி
சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ‘வெண்ணிலா கபடிக்குழு’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் நகைச்சுவை நடிகர் சூரி. அதன்பின் பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்தார்.
மேலும், வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘விடுதலை’ திரைப்படத்தில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார் சூரி. இப்படம் 2 பாகங்களாக உருவாகியுள்ளது. சினிமாவில் நடிப்பது மட்டுமில்லாமல் மதுரையில் ஓட்டல் தொழிலையும் சூரி நடத்தி வருகிறார்.
தியேட்டரில் அடி வாங்கிய நடிகர் சேத்தன்
சின்ன திரையிலேயே சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தும் நடிகர் சேத்தனுக்கு விடுதலைப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சின்னத்திரையில் சேத்தன் நடித்த விடாது கருப்பு என்ற தொடர் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இத்தொடர் வெற்றிக்குப் பிறகு தமிழ் சினிமாவிலும் இவர் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் சேத்தன் ஒரு சேனலுக்கு பேட்டி கொடுத்தார்.
அந்த பேட்டியில் அவர் பேசுகையில்,
விடுதலை படத்தில் இவர் மிக மோசமான போலீஸாக நடித்துள்ளேன். இந்த கதாபாத்திரத்தை பார்க்கும் அனைவருக்கம் கோபம் வரும். என் மனைவி ப்ரியதரிஷினியுடன் நான் விடுதலை படத்தை பார்க்க தியேட்டருக்குச் சென்றேன்.
அப்போது, படத்தில் மோசமான விஷயங்களை செய்யும் காட்சிகள் வரும்போதெல்லாம் என்னை என் மனைவி அடித்தார். எதுக்காக இவ்ளோ மோசமா நடந்துக்குற என்று திட்டினார். மனைவியுடன் படத்துக்கு வந்ததே ரொம்ப தப்பா போச்சே என்று நினைத்துக் கொண்டேன் என்றார்.