எலான் மஸ்க்கின் வலது கரமாகும் சென்னை இளைஞர்: யார் இவர் தெரியுமா?

Twitter Chennai Elon Musk India
By Fathima Nov 02, 2022 11:17 AM GMT
Report
Courtesy: BBC Tamil

ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதற்கான இழுபறி நீண்ட நாட்களாக தொடர்ந்த நிலையில், அக்டோபர் மாதம் ஸ்பேஸ் X மற்றும் டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் ட்விட்டரை முழுவதுமாக கையப்படுத்தினார்.

அத்துடன் ட்விட்டரை வாங்கிய சில மணி நேரங்களிலேயே, ட்விட்டரின் இதுநாள்வரை தலைமை செயல் அதிகாரியாக இருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பராக் அகர்வால் மற்றும் சில முக்கிய அதிகாரிகளை பொறுப்பில் இருந்து நீக்கம் செய்தார்.

ஆனால் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பராக் அகர்வாலை ட்விட்டரில் இருந்து நீக்கிய எலான் மஸ்க், இப்போது மீண்டும் ஶ்ரீராம் கிருஷ்ணன் என்ற இந்தியரின் உதவியை நாடியுள்ளார்.

சென்னையில் பிறந்த இந்திய-அமெரிக்க பொறியாளரான ஶ்ரீராம் கிருஷ்ணன், இப்போது எலான் மஸ்க்கின் முக்கிய குழுவில் உறுப்பினராக உள்ளார். இந்த தகவலை ஶ்ரீராம் கிருஷ்ணன் அவரது ட்விட்டர் கணக்கு தகவலில் உறுதிப்படுத்தியுள்ளார்.

யார் இந்த ஶ்ரீராம் கிருஷ்ணன்?

ஸ்ரீராம் சென்னையில் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். அவரது தந்தை இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார், அவரது தாயார் இல்லத்தரசி, அவருக்கு 2002 ஆம் ஆண்டு ஆர்த்தி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. 

ஸ்ரீராம் கிருஷ்ணன் 2001-2005 வரை சென்னையில் உள்ள எஸ்ஆர்எம் கல்லூரியில் பி.டெக் படித்தார், அதை தொடர்ந்து 2005 முதல் 2011 வரை மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பணிபுரிந்த ஸ்ரீராம் கிருஷ்ணன் அமெரிக்காவின் சியாட்டிலுக்கு குடிபெயர்ந்தார்.

எலான் மஸ்க்கின் வலது கரமாகும் சென்னை இளைஞர்: யார் இவர் தெரியுமா? | Chennai Boy Work Elon Musk Twitter

அதன்பின் ஸ்ரீராம் 2013-2016க்கு இடையில் மெட்டாவில் (பேஸ்புக்) பணிபுரிந்ததாக அவரது லிங்க்டின் சுய குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிறகு 2017 முதல் 2019 வரை ட்விட்டரில் பணியாற்றினார்.

ட்விட்டரில் நுகர்வோர் குழுக்களை வழிநடத்திய ஸ்ரீராம், அந்த நிறுவனத்தில் பயனர் அனுபவம், தேடல், கண்டுபிடிப்பு மற்றும் பார்வையாளர்களின் வளர்ச்சி ஆகிய பிரிவுகளைக் கையாண்டார்.

ஸ்ரீராம் கிருஷ்ணனின் தொழில்கள்

ஸ்ரீராம் கிருஷ்ணன் பணிபுரியும் நிறுவனத்தில் a16z என்று அழைக்கப்படும் 'Andreesen Horowitz' இல் பங்குதாரர். இந்த Andreesen Horowitz மூலம் பல்வேறு நுகர்வோர் ஸ்டார்ட் அப்களில் அவர் முதலீடு செய்துள்ளார்.

பிட்ஸ்கி, ஹாபின், பாலிவொர்க் போன்ற நிறுவனங்களின் வாரியங்களில் ஸ்ரீராம் உறுப்பினராக உள்ளார், ஸ்ரீராம் கிருஷ்ணன் a16zஇல் சேருவதற்கு முன்பு ட்விட்டர் உட்பட பல பெரிய நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்.

எலான் மஸ்க்கின் வலது கரமாகும் சென்னை இளைஞர்: யார் இவர் தெரியுமா? | Chennai Boy Work Elon Musk Twitter

எலான் மஸ்க்குடன் சந்திப்பு

ஸ்ரீராமும் அவரது மனைவி ஆர்த்தியும் சேர்ந்து “தி குட் டைம் ஷோ” என்ற யூடியூப் சேனலை தொடங்கி நடத்தி வந்தனர்.

2020ஆம் ஆண்டு பிப்ரவரியில் இந்த தம்பதி எலான் மஸ்கை ஒரு நள்ளிரவு கேளிக்கை நிகழ்ச்சிக்கு அழைத்திருந்ததாகவும், அந்த குறுஞ்செய்தியின் அடிப்படையில் அதில் கலந்து கொள்ள எலான் மஸ்க் ஒப்புக் கொண்டதாகவும் ஸ்ரீராம் நியூயார்க் டைம்ஸ் நாளிதழிடம்  தெரிவித்து இருந்தார்.

அத்துடன் சில வருடங்களுக்கு முன்பு இந்த தம்பதி எலான் மஸ்கை அவரது ஸ்பேஸ் எக்ஸ் தலைமையகத்தில் சந்தித்துப் பேசியதாகவும் தகவல் உள்ளது.

ஸ்ரீராம் கிருஷ்ணனின் சமீபத்திய ட்வீட்

பொறியியலாளரான ஸ்ரீராம் கிருஷ்ணன், ட்விட்டர் நிறுவனத்திற்காக எலான் மஸ்க்குடன் ஒத்துழைப்பதாக தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

அதில் "நான் எலான் மஸ்க்கிற்கு தற்காலிக அடிப்படையில், வேறு சில மூத்த அதிகாரிகளுடன் சேர்ந்து வேலை செய்து கொண்டிருக்கிறேன். இது ஒரு மிக முக்கியமான நிறுவனம் என்று நான் நம்புகிறேன். ட்விட்டர் உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது, அது எலான் மஸ்க் தலைமையில்தான் நடக்கும்" என தெரிவித்துள்ளார்.

மற்றொரு ட்விட்டில், தாம் இன்னும் தற்போதைய நிறுவனத்தில் வேலை செய்து வருவதாக ஸ்ரீராம் குறிப்பிட்டுள்ளார்.


மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US