Smart Phones: மொபைல் போனுக்கு எப்போது சார்ஜ் போட வேண்டும்? பலரும் அறியாத உண்மை
நாம் பயன்படுத்தும் மொபைல் போனை சார்ஜ் செய்வதற்கு நிறைய விதிமுறைகள் உள்ளன அவை என்ன நிபுணர்களின் கூற்றுடன் விளக்கமாக இந்த பதிவில் பார்க்கலாம்.
போனை சார்ஜ் போடும் முறை
தற்போது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் போன் பயன்படுத்துகின்றனர். கடினமான வேலைகளை கூட தற்போது இந்த மொபைல் போனில் சுலபமாக செய்து விடலாம்.
அந்த அளவிற்கு தொழிநுட்பம் மிகவும் வேகமாக வளர்ந்துள்ளது. நாம் நமது தேவைக்கு பயன்படுத்தும் மொபைல் போன்களை பயன்படுத்த தெரிந்திருப்பது அவசியம்.
இப்போது இருக்கும் சிறுவர்கள் நாள் முழுக்க கேம் விளையாடுவது, படம் பார்ப்பது என ஸ்மார்ட்போன்களை இடைவிடாது பயன்படுத்துகின்றனர். பெரியோரும் யூடியூப், இன்ஸ்டாகிராம் பார்க்கின்றனர்.
இதனால் அடிக்கடி சார்ஜும் செய்து கொள்கின்றனர். போனை இப்படி சார்ஜ் செய்யும் போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். நாம் ஸஸ்மார்ட்போன்களை சரியாக பயன்படுத்தினால் அவற்றை 2 ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்த முடியும்.
முறை தவறி பயன்படுத்தும் போது போன் 6 மாதங்களில் பழுதாகிவிடும். இதன் காரணமாக தான் சில பொன்கள் அதிக வெப்பமடைகின்றன. போன் நன்றாக செயற்பட அதன் பேட்டரியை நன்றாக பராமரிப்பது அவசியம். ஒரு மொபைலை வாங்கும்போதே பேட்டரி குறித்து கவனிக்க வேண்டும்.
பேட்டரியின் தரம், சார்ஜிங் வசதி ஆகியவை தெரிந்து வாங்குவது அவசியம். போனுக்கு சார்ஜ் போடும் போது சிலர் அதை 100 சதவீதம் வர வேண்டும் என்பதற்காக அடிக்கடி போடுவார்கள்.
சிலர் 1 சதவீதம் வரை பாவித்து விட்டு அதன் பின்னர் சார்ஸ் போடுவார்கள். ஆனால் இது இரண்டிலும் எது சரியானது என்பது யாருக்கும் தெரியாது. நிபுணர்களின் கூற்றுப்படி சார்ஜ் போடும் முன் செல்போனில் பேட்டரி முழுவதுமாக தீரவேண்டும்.
ஆனால் எல்லா நேரங்களிலும் இப்படி செய்தால் ஸ்மார்ட்போன் பேட்டரி பாதிக்க வாய்ப்புள்ளது. நம்முடைய செல்போன் பேட்டரி நல்ல நிலையில் இருக்க வேண்டுமெனில், 20% சார்ஜ் காட்டும்போது தான் மொபைலை சார்ஜரில் சொருக வேண்டும்.
இதில் சார்ஜ் 100% ஏறும் வரை காத்திருக்காமல் 80 முதல் 90 சதவீதம் வரை மட்டுமே சார்ஜ் செய்ய வேண்டும். இதுவே நன்று என நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த முறையை நீங்கள் பின்பற்றினால் உங்கள் போனை நீண்ட நாட்களுக்கு பயன்படுத்தலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |