சப்பாத்தியில் இந்த ஒரோ ஒரு கருப்பு உணவு பொருளை சேர்த்துக்கோங்க! நீரிழிவு நோய் அலண்டு ஓடும்
வழமையாக தயாரிக்கும் சப்பாத்தியில் சிறிதளவு தேன், கருப்பு எள், நெய் போன்றவற்றை கலந்து தயார் செய்தால் அவர்கள் இன்னும் விரும்பி ருசிப்பார்கள்.
எள்ளு விதையில் இரும்புச்சத்து ஏராளமான அளவில் நிறைந்துள்ளது.
எள்ளு விதை நல்ல நறுமணத்தையும் கொடுக்க கூடியது. அது மட்டும் இல்லை நீரிழிவு நோயாளிகளுக்கு மருந்தாகவும் செயற்படும். இதேபோல தேன், நெய் போன்றவற்றை உணவில் சேர்ப்பதால் எண்ணற்ற ஆரோக்கியமும் அதிகரிக்கும்.
இந்த மூன்று பொருளையும் உணவில் கலந்து இனி சுவை மிக்க சப்பாத்தி தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கோதுமை மாவு – 1 கப்
- வறுத்த கருப்பு எள் – 2 ஸ்பூன்
- தேன் – 3 டேபிள் ஸ்பூன்
- எண்ணெய் – சிறிதளவு
- நெய் – 4 டேபிள் ஸ்பூன்
- உப்பு – சுவைக்கேற்ப
செய்முறை
வழமை போல சப்பாத்திக்கு மாவு பிசையும் பாணியையே பின்பற்றவும்.
நீங்கள் உப்பு சேர்க்கும் முன் தேன், கருப்பு எள் போன்றவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
சப்பாத்தியை கல்லில் சுட்டு எடுக்கும் போது எண்ணெய்க்கு பதிலாக நெய் சேர்த்துக்கொள்ளுங்கள். அல்லது நெய் – எண்ணெய் கலந்து கலவையை சப்பாத்திக்கு மேல் தடவி பிரட்டி எடுக்கவும்.
இப்போது நீங்கள் எதிர்பாத்த ஹனி சப்பாத்தி தயாராக இருக்கும். அவற்றை சாதாரணமாகவோ அல்லது குருமாவுடனோ சேர்த்து ருசித்து மகிழவும்.