சரித்திரம் படைக்க காத்திருக்கும் சந்திரயான் 3: உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் தருணம்
நிலவுக்கு விண்கலங்களை அனுப்பி அதற்கான ஆய்வுகளை மேற்கொண்டு சரித்திரத்தில் இடம்பிடிப்பதற்காக உலக வல்லரசு நாடுகள் செயற்பட்டு வருகிறார்கள்.
சந்திராயன் 3
இந்நிலையில், இந்தியா தன் முயற்சியில் ஜுலை 14ஆம் திகதி மதியம் 2.35 மணிக்கு சந்திராயன் 3 விண்கலத்தை விண்ணிற்கு ஏவியது.
இதற்கு முன்னதாக சந்திராயன் 1 நிலவில் ஏவப்பட்டபோது அது நிலவின் தென்துருவ பகுதியில் தண்ணீர் உரைந்து இருக்கும் தடயங்களை அனுப்பியிருந்தது.
அதன்பின் மேலதிக ஆய்விற்கான சந்திராயன் 2 திட்டத்தை ஆரம்பித்து 2019ஆம் ஆண்டு விண்கலத்தை நிலவிற்கு ஏவியிருந்தது ஆனால் அத்திட்டம் வெற்றியளிக்கவில்லை. இந்நிலையில் தான் தற்போது சந்திராயன் 3 நிலவிற்கு ஏவி வெற்றிகரமாக நிலவின் புகைப்படத்தை அனுப்பி வைத்திருந்தது.
சந்திராயன் - 3 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. ஏறத்தாழ சுமார் 40 நாட்கள் பயணத்திற்கு பிறகு நாளை (ஆகஸ்ட் 23ஆம் திகதி) மாலை 5.30 மணிக்கு சந்திரயான் - 3 விண்கலம் நிலவில் தரையிறங்க உள்ளது.
சந்திராயன் 2இற்கும் 3இற்கும் உள்ள வேறுபாடு
தற்போது சந்திராயன் குறித்து பல தகவல்கள் வெளிவந்துக் கொண்டிருக்கும் நிலையில், இரண்டாவதாக ஏவப்பட்ட சந்திராயன் விண்கலத்திற்கும் மூன்றாவதாக ஏவப்பட்டிருக்கும் விண்கலத்திற்கும் உள்ள வேறுபாடுகள் என்னென்ன என்பதை இந்தக் காணொளியில் தெளிவாக பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |