YouTube-ல் உலக சாதனையை முறியடித்த சந்திரயான்-3
உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த சந்திரயான் 3 திட்டமானது யூடியூபிலும் உலக சாதனை படைத்துள்ளது.
சந்திரயான்-3 திட்டம்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, நிலவின் தென்துருவ பகுதியை ஆய்வு செய்வதற்கு சந்திரயான் 3 விண்கலத்தை வடிவமைத்து, எல்.வி.எம்.3 எம்-4 என்ற ராக்கெட் மூலம் கடந்த மாதம் 14 ஆம் திகதி விண்ணில் செலுத்தியது.
மேலும், சந்திரயான் 3 விண்கலத்தில் உள்ள லேண்டர் ஆகஸ்ட் 23 ஆம் திகதி நிலவில் தரையிறங்கும் என்றும், நிலவை அடைய 40 நாள்கள் ஆகும் என்று இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், சந்திரயான் 3 விண்கலத்தில் உள்ள லேண்டர் ஆகஸ்ட் 23 ஆம் திகதி நிலவில் தரையிறங்கும் என்றும், நிலவை அடைய 40 நாள்கள் ஆகும் என்று இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, நேற்று மாலை 6.04 மணிக்கு சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது.
YouTube-ல் உலக சாதனை
சந்திரயான்-3 விண்கலத்தில் உள்ள லேண்டர் நிலவில் தரையிறங்கும் நிகழ்வை இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் நேரலையில் ஒளிபரப்பு செய்தது. இது 56 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை கடந்தது.
இதற்கு முன்பு, ஸ்பெயின் நாட்டின் ஐபாய் யூடியூப் சேனல் நேரலையை 34 லட்சம் பேர் பார்த்தனர். அது தான் உலக சாதனையாக இருந்தது.
"Chandrayaan-3 lands on the moon, with nearly 8 million people watching live on ISRO's Official YouTube channel during its peak time. This marks the highest viewership for any live stream on YouTube."#Chandrayaan3 #ISRO pic.twitter.com/c3ln4pDYET
— Upsc Civil Services Exam (@UpscforAll) August 23, 2023
ஆனால், தற்போது சந்திரயான்-3 திட்டத்தின் நேரலை அதற்கு அதிகமான பார்வைகளை கடந்து உலக சாதனை படைத்துள்ளது.