கும்ப ராசியில் நிகழும் சந்திர கிரகணம்: எந்தெந்த ராசிகளுக்கு பாதிப்பு அதிகம்?

Horoscope Astrology Hinduism
By Vinoja Aug 27, 2026 05:20 AM GMT
Report

இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் ஆகஸ்ட் 28-ஆம் தேதி நிகழவுள்ளது. இந்திய நேரப்படி, இந்த சந்திர கிரகணம் காலை 6.53 மணிக்குத் தொடங்கி, மதியம் 12.31 மணிக்கு முடிவடைகிறது. இந்த கிரகணம் பகல் வேளையில் நிகழ்வதால், இந்தியாவில் இருந்து இதனைப் பார்க்க முடியாது.

இருப்பினும், ஜோதிடத்தின் அடிப்படையில் பார்க்கும்போது, கிரகணம் என்பது பொதுவாக ஒரு மோசமான நிகழ்வாகவே கருதப்படுகிறது.அதுவும் இந்த சந்திர கிரகணம் சனி பகவானின் ஆட்சி ராசியான கும்ப ராசியில் நிகழ்வதால், இதன் தாக்கம் கூடுதல் முக்கியத்துவம் பெறுவதாக ஜோதிடத்தில் கூறப்படுகிறது.

கும்ப ராசியில் நிகழும் சந்திர கிரகணம்: எந்தெந்த ராசிகளுக்கு பாதிப்பு அதிகம்? | Chandra Grahan In Aquarius On 28 Who Get Bad Luck

புனர்பூசம் நட்சத்திரத்தில் செவ்வாய்: இந்த 3 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்கும்!

புனர்பூசம் நட்சத்திரத்தில் செவ்வாய்: இந்த 3 ராசிகளுக்கு பணவரவு அதிகரிக்கும்!

இதன் காரணமாக, இந்த கிரகணத்தின் எதிர்மறையான விளைவுகள் பலமடங்கு அதிகரிக்கக்கூடும் என்று ஜோதிட நம்பிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்த கிரகணத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களிடமும் ஏதேனும் ஒரு வகையில் காணப்படலாம் என்றாலும், குறிப்பிட்ட சில ராசிக்காரர்கள் மட்டும் கூடுதல் கவனத்துடன் எதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என ஜோதிட கணிப்புகள் குறிப்பிடுகின்றன. 

அந்த வகையில், கும்ப ராசியில் நிகழவுள்ள 2026 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சந்திர கிரகணத்தால் எந்தெந்த ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என இந்த பதிவில் பார்க்கலாம்.

கடகம்

கும்ப ராசியில் நிகழும் சந்திர கிரகணம்: எந்தெந்த ராசிகளுக்கு பாதிப்பு அதிகம்? | Chandra Grahan In Aquarius On 28 Who Get Bad Luck

2026 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சந்திர கிரகணத்தால் கடக ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். பணியிடத்தில் வேலைப்பளு அதிகரிப்பதால் மன அழுத்தமும், ஆரோக்கியப் பிரச்சனைகளும் ஏற்படலாம்.

எனவே போதிய ஓய்வு எடுத்து, உடல்நலனில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மேலும், இக்காலத்தில் எந்த முடிவையும் அவசரமாக எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.

குறிப்பாக புதிய சொத்து வாங்குவது அல்லது பெரிய முதலீடுகளை செய்வதை இந்த காலகட்டத்தில் தவிர்ப்பது நல்லது. இல்லையேல் நிதி இழப்பை சந்திக்க நேரிடலாம்.

கன்னி

கும்ப ராசியில் நிகழும் சந்திர கிரகணம்: எந்தெந்த ராசிகளுக்கு பாதிப்பு அதிகம்? | Chandra Grahan In Aquarius On 28 Who Get Bad Luck

சந்திர கிரகண காலத்தில் கன்னி ராசிக்காரர்கள் பேச்சில் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற வார்த்தைகள் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.

கடின உழைப்புக்கு ஓரளவு பலன் கிடைத்தாலும், குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பேச்சில் நிதானத்துடன் இருப்பதோடு, தேவையற்ற செலவுகளையும் குறைத்துக் கொள்ள வேண்டும்.

புதிய தொழில் தொடங்குவது தொடர்பில் இந்த காலகட்டத்தில் சற்று எச்சரிக்கையாக முடிவெடுக்க வேண்டியது அவசியம்.

கும்பம்

கும்ப ராசியில் நிகழும் சந்திர கிரகணம்: எந்தெந்த ராசிகளுக்கு பாதிப்பு அதிகம்? | Chandra Grahan In Aquarius On 28 Who Get Bad Luck

புதன் பெயர்ச்சியால் உருவாகும் பத்ர ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி!

புதன் பெயர்ச்சியால் உருவாகும் பத்ர ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி!

2026 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சந்திர கிரகணத்தால் கும்ப ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.சிறிய அலட்சியமும் பெரிய இழப்பை ஏற்படுத்தலாம்.

வியாபாரிகள் லாபம் பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். தொழிலில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், புதிய திட்டங்களைத் தொடங்கும்போதும் செயல்படுத்தும்போதும் கூடுதல் கவனம் தேவை.

பணியிடத்திலும் சரி குடும்ப உறவுகளிடமும் சரி வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த வேண்டும். இல்லையேல் சிறிய வாக்குவாதங்களும்  மோதலாக மாறுவதற்கு வாய்ப்புள்ளது. 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).                    

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US