chanakya topic: வெற்றி உங்கள தேடி வரணுமா? அப்போ இந்த குணங்களை ஏற்படுத்திக்கோங்க
முன்பு ஒரு காலத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞராகவும் சிறந்த ராஜதந்திரியாகவும், ஒரு தலைசிறந்த பொருளாதார நிபுணராகவும் வாழ்ந்தவர் தான் ஆச்சார்யா சாணக்கியர்.
மனித வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் பற்றியும் ஆழ்ந்த அறிவையும் ஞானத்தைக் கொண்டிருந்தமையால் இவர் கருத்துக்கள் பிற்காலத்தில் உலகப்புகழ் பெற்றது.
இவர் தனது வாழ்க்கையில் கடைப்பிடித்த பல்வேறு விடயங்கள் மற்றும் சந்தித்த சவால்கள் மற்றும் அனுபவங்களின் தொகுப்பே சாணக்கிய நீதியாகும்.
சாணக்கிய நீதியை உலகளாவிய ரீதியில் பல நாடுகளை சேர்ந்த ஏராளமானவர்கள் பின்பற்றுகின்றனர்.
வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பாடங்களையும் சரியான நெறிமுறையில் குறிப்பிடும் சணக்கியரின் கருத்துக்களை பின்பற்றி வாழ்வில் வெற்றி அடைந்தவர்கள் பலர் இருக்கின்றனர்.
அந்த வகையில் வாழ்வில் சாதனைகளை செய்ய வேண்டும் என நினைப்பவர்களிடம் நிச்சயம் இருக்க வேண்டிய குணங்கள் தொடர்பில் சாணக்கிய நீதியில் குறிப்பிடப்படும் விடயங்களின் தொகுப்பை இந்த பதிவில் பார்க்கலாம்.
அர்ப்பணிப்பு
சாணக்கிய நீதியின் பிரகாரம் அர்ப்பணிப்பு இல்லாதவர்கள் வாழ்வில் வெற்றியை எந்த விடயத்திலும் பார்க்கவே முடியாது என எச்சரிக்கின்றார்.
அர்பணிப்பும் மற்றவர்கள் மீது காடட்டும் உள்ளமும் யாரிடம் இருக்கின்றதோ அவர்கள் வாழ்வில் எதற்கும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.
கடவுளின் அருளும் ஆசீர்வாதமும் அவர்களுக்கு என்றும் இருக்கும். இவர்களின் வாழ்வில் வெற்றி தேடி வந்துக்கொண்ட இருக்கும்.
ஒழுக்கம்
ஒழுக்கம் இல்லாதவர்கள் வாழ்க்கையில் எவ்வளவு போராடினாலும் முன்னேற்றத்தையோ வெற்றியையோ பார்க்கவே முடியாது என்கின்றார் சாணக்கியர். ஒழுக்கமற்றவர்கள் எதை அடைந்தாலும் அவர்களிடம் அது நிலைக்காது.
ஒழுக்க விதிகளை பின்பற்றி எந்த செயலையும் செய்ய ஆரம்பிக்கும் போது இயற்கையின் நியதிபடி அவர்கள் நிச்சயம் வெற்றி காணபார்கள்.
கவனம்
வாழ்வில் வெற்றியடைய வேண்டும் என நினைப்பவர்கள் எப்போதும் தங்களின் வேலையில் முழு கவனத்தையம் செலுத்த வேண்டியது அவசியம். தொழில் விடயத்தில் கவனக்குறைவாக இருப்பவர்கள் வாழ்க்கையில் வெற்றி கிட்டவே வராது என்கின்றார் சாணக்கியர்.
அறிவு
அறிவு தான் ஒரு மனிதனின் சிறந்த நண்பனாக இருக்க முடியும் என்கின்றார் சாணக்கியர். அறிவையும் அனுபவத்தையும் வாழ்க்கை முழுவதும் பெருக்கிக்கொண்டே இருக்க வேண்டும்.
இது ஒரு போதும் வீண்போகாது யாராலும் நம்மிடமிருந்து நமது கல்வி அறிவை திருடவும் முடியாது. அறிவை வளர்த்துக்கொள்வதில் கவனம் செலுத்துபவன் வாழ்வில் வெற்றிகளுக்கு பஞ்சமே இருக்காது.
எதிர்காலத்தைப் பற்றிய திட்டம்
சாணக்கியரின் சருத்துபடி எதிர்காலத்தில் செய்ய வேண்டிய விடயங்கள் குறித்து தெளிவான திட்டத்துடன் இருப்பவரின் வாழ்க்கை என்றும் சரியான பாதையில் தான் செல்லும்.
அவர்களை யாராலும் திசைதிருப்பவே முடியாது. இவர்கள் வாழ்வில் பல வெற்றிகளை சந்திப்பார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |