Chanaya: ஆண்களை பெண்களிடம் நெருங்க விடாமல் தடுக்கும் 6 ரகசியங்கள்- நீங்களும் தெரிஞ்சிக்கோங்க
பண்டைய காலத்தில் இந்தியாவின் சிறந்த ஆசிரியர், தத்துவஞானி மற்றும் அரச ஆலோசகர் என பன்முக கொண்டு சிறந்து விளங்கியவர் தான் சாணக்கியர். இவர் “கௌடில்யர்” என்ற பெயராலும் அழைக்கப்பட்டார்.
சாணக்கியர் வாழ்ந்த காலப்பகுதியில் வாழ்க்கை, வெற்றி பற்றிய மதிப்புமிக்க பல கொள்கைகள் உருவாக்கியிருக்கிறார்.
இவைகளையே அறிவுரைகளாக தொகுத்து இன்று மக்கள் சாணக்கிய நீதி என படித்து கொண்டிருக்கின்றனர்.
மேலும், தொழில், நட்பு, திருமண வாழ்க்கை, செல்வம் மற்றும் பெண்கள் தொடர்பான பல விஷயங்களை சாணக்கியர் தனது நீதி சாஸ்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அந்த வகையில் சில விஷயங்களில் ஆண்களை விட பெண்கள் முன்னிலையில் இருப்பதாக சாணக்கியர் கூறுகிறார். அவை தொடர்பாக தொடர்ந்து பதிவில் தெரிந்து கொள்வோம்.
சாணக்கியரின் தத்துவங்கள்
1. பெண்களிடம் காணப்படும் சிறந்த குணங்களில் ஒன்றாக புத்திசாலித்தனம் பார்க்கப்படுகின்றது. இந்த குணம் ஆண்களை விட பெண்களுக்கே அதிகமாக இருக்கும். இதனை பல சந்தரப்பங்களில் வெளிகாட்டியிருப்பார்கள். அனைத்துப் பிரச்சனைகளையும் அச்சமின்றி எதிர்கொண்டு குடும்பத்தை நல்ல முறையில் பராமரிப்பார்கள். மற்றவர்களுடன் ஒப்பிடும் போது பெண்களுக்கே அதிகமான சவால்கள் வாழ்க்கையில் வரும்.
2. சாணக்கிய நீதியில் “காமோஸ்தகுன் உச்யதே” என்ற வார்த்தை உள்ளது. ஆண்களை விட பெண்கள் தான் உறவில் சிறந்தவர்களாக இருப்பார்களாம். உதாரணமாக ஆண்களை விட பெண்கள் உறவு விடயத்தில் எட்டு மடங்கு ஈர்ப்புடன் இருப்பார்கள் என சாணக்கியர் கூறுகிறார்.
3. ஆண்களை விட பெண்கள் பல மடங்கு பசியை அனுபவிப்பார்கள் என சாணக்கியர் கூறுகிறார். இதனால் தான் ஆண்களை விட அதிகமாக பெண்கள் சாப்பிடுவதற்கு முக்கிய காரணம். பெண்களின் உடல் அமைப்பின்படி தான் கலோரிகள் தேவைப்படும்.
4. ஆண்களை விட பெண்கள் மென்மையான இதயம் கொண்டவர்களாக காணப்படுகிறார்கள். குடும்பம் மற்றும் நெருங்கிய நண்பர்களுடன் அன்பாக நடந்து கொள்வார்கள். குடும்ப உறுப்பினர்களுக்கு இன்பம், துன்பம் போன்றவற்றில் ஆதரவளிப்பதில் பெண்கள் எப்போதும் முன்னணியில் இருக்கிறார். ஒரு பெண் முழு குடும்பத்தின் பாரத்தை இறக்கும் வரை சுமந்து வருகிறார்.
5. ஆண்களை விட பெண்களுக்கு ஆறு மடங்கு தைரியம் உள்ளது. சாணக்கியரின் கொள்கைப்படி ஆண்களை விட பெண்கள் ஆறு மடங்கு தைரியசாலிகளாக இருப்பார்கள். ஆண்கள் பயந்து ஒதுங்கும் சமயத்தில் பெண்கள் அதனை முறியடித்து விட்டு ஆண்களை அழைத்து செல்வார்கள்.
சிறந்த மனைவி ஒரு ஆணுக்கு கிடைத்து விட்டால் அவன் தான் இந்த உலகின் அதிர்ஷ்டசாலியாக இருப்பான். மன அழுத்த சூழ்நிலைகளை சமாளிப்பதில் ஆண்களை விட பெண்களே சிறந்தவர்கள். சில சமயங்களில் பெண்களின் தைரியம் ஆண்களை மிரள வைக்கிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |