சாணக்கிய நீதி: இந்த குணங்கள் கொண்ட ஆண்களை பெண்கள் அதிகம் விரும்புவார்கள்...உங்களிடம் இருக்கா?
பண்டைய காலத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞராகவும் சிறந்த ராஜதந்திரியாகவும், ஒரு தலைசிறந்த பொருளாதார நிபுணராக திகழ்ந்தவர் தான் ஆச்சார்யா சாணக்கியர்.
மனித வாழ்க்கையின் அனைத்து அம்சங்களை பற்றியும் ஆழ்ந்த அறிவையும் ஞானத்தைக் கொண்டிருந்தமையால் இவரின் கருத்துக்கள் பிற்காலத்தில் உலகப்புகழ் பெற்றது.
இவர் தனது வாழ்க்கையில் கடைப்பிடித்த பல்வேறு விடயங்கள் மற்றும் சந்தித்த சவால்கள் மற்றும் அனுபவங்களின் தொகுப்பே சாணக்கிய நீதி ஆகும்.
சாணக்கிய நீதியில் குறிப்பிடப்பட்டுள்ளதன் பிரகாரம் குறிப்பிட்ட சில குணங்கள் பெண்களை எளிதில் கவருவதாக குறிப்பிடுகின்றார்.
இத்தகைய குணங்களை கொண்ட ஆண்களினால் பெண்கள் அதிகம் ஈர்க்கப்படுகின்றார்கள் என சாணக்கியர் குறிப்பிடுகின்றார் அப்படிப்பட்ட குணங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பெண்களை ஈர்க்கும் குணங்கள்
சாணக்கிய நீதியின் பிரகாரம் புத்திசாலித்தனம் கொண்ட ஆண்களை பெண்கள் எளிதில் விரும்புவார்களாம்.
மிகவும் சாதுர்யமாக முடிவெடுக்கும் குணம் கடினமான சூழ்நிலைகளிலும் தெளிவாக முடிவெடுக்கும் குணம் கொண்ட ஆண்களை பெண்கள் அதிகம் விரும்புகின்றார்கள்.
சாணக்கிய நீதி படி, பெண்கள் எப்போதும் தங்களை பாதுகாப்பாக உணரவைக்கும் ஆண்களையே விரும்புவார்கள்.
பெண்கள் மீது மரியாதை கொண்ட ஆண்களை எந்த பெண்ணும் வெறுப்பதே கிடையாது என்கின்றார் சாணக்கியர்.
சாணக்கிய நீதியின் பிரகாரம் பெண்களுக்கு சம உரிமை கொடுக்கும் ஆண்களால் பெண்கள் அதிகம் ஈர்க்கப்படுகின்றார்கள். இத்தகைய ஆண்களை வாழ்க்கை துணையாக அடைவதை பெண்கள் வரமாக நினைக்கின்றார்கள்.
பெற்றோரை மதித்து நடக்கும் குணம் கொண்ட ஆண்கள் மீது பெண்களுக்கு தனித்துவமான மதிப்பும் மரியாதையும் ஏற்படுகின்றது. இத்தகைய குணம் கொண்ட ஆண்களை பெண்கள் மிகவும் விரும்புவார்கள்.
கடின உழைப்பாளிகளாக இருக்கும் ஆண்கள் பெண்களை நொடியில் ஈர்க்கின்றார்கள். இப்படிப்பட்ட குணம் கொண்ட ஆண்களை வாழ்க்கை துணையாக பெறவே எல்லா பெண்களும் விரும்புவார்கள் என சாணக்கியர் குறிப்பிடுகின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |