இதை பின்பற்றுவர்களின் வெற்றியை யாராலும் தடுக்கவே முடியாது! சாணக்கியர் கூறும் வெற்றிக்கான 5 ரகசியங்கள்
சாணக்கிய நீதி உலகளாவிய ரீதியில் பிரசித்தி பெற்ற ஒரு தத்துவ நூலாக திகழ்கின்றது. இந்த நூல் ஆச்சாரியா சாணக்கியரின் கொள்கைகளையும் தத்துவங்களையும் உள்ளடக்கி தொகுக்கப்பட்டுள்ளது.
பண்டைய காலத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞர், ஒரு சிறந்த இராஜதந்திரி மற்றும் ஒரு தலைசிறந்த பொருளாதார நிபுணராக திகழ்ந்து உலகம் முழுவதும் பிரபல்யம் அடைந்தவர் தான் ஆச்சாரியா சாணக்கியர்.

சாணக்கிய நீதியில் இருந்து திரட்டப்பட்ட தகவல்களின் பிரகாரம் வாழ்வில் செல்வத்தையும் வெற்றியையும் பெருக்கிக்கொண்டே செல்வதற்கு சாணக்கியர் கூறும் முக்கிய விதிகள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
வெற்றியின் முக்கிய 5 ரகசியங்கள்
1.குறைவாகப் பேசி, அதிகம் சிந்திக்க வேண்டும்
சாணக்கியரின் கருத்துப்படி, அளவுக்கு அதிகமாகப் பேசுவது ஒருவரின் பலவீனத்தை வெளிப்படுத்தும். அறிவார்ந்தவர்கள் பேசுவதற்கு முன் நன்கு சிந்தித்து, தேவையானதை மட்டுமே பேசுவார்கள்.
குறைவாகப் பேசி, முக்கியமான விஷயங்களில் கவனம் செலுத்தும்போது, மற்றவர்களின் மதிப்பையும் நம்பிக்கையையும் பெற முடியும். இந்தப் பழக்கம் மன அமைதியையும் வாழ்க்கை வெற்றியையும் வளர்க்க உதவுகிறது.

2.ரகசியங்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்
சாணக்கிய நீதி கூறுவதாவது, வாழ்க்கையில் வெற்றி பெற விரும்புபவர்கள் தங்களின் திட்டங்கள் மற்றும் தனிப்பட்ட விஷயங்களை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ளக் கூடாது என்பதாகும்.
தங்களின் ரகசியங்களை வெளிப்படுத்துபவர்கள் பல நேரங்களில் ஏமாற்றங்களையும் துரோகங்களையும் சந்திக்க நேரிடும். எனவே, உங்கள் இலக்குகளை அமைதியாக அடைந்து, உங்கள் வெற்றியே உங்களைப் பற்றி பேசட்டும் என்று சாணக்கியர் அறிவுறுத்துகிறார்.

3.நேரத்தை மதிக்க வேண்டும்
"காலம் பொன்னானது" என்ற பழமொழி முற்றிலும் உண்மையானது. நேரத்தை மதிப்பவர்களே வாழ்க்கையில் முன்னேறுகிறார்கள்.
காலமே மனிதனின் மிகப்பெரிய செல்வம் என்று சாணக்கிய நீதி வலியுறுத்துகிறது. வெற்றியை நோக்கி செல்ல விரும்புபவர்கள் தங்களுக்குக் கிடைக்கும் நேரத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்த வேண்டும். வெற்றியாளர்கள் ஒருபோதும் நேரத்தை வீணடிப்பதில்லை.
4.தவறான சகவாசத்தைத் தவிர்க்க வேண்டும்
ஒருவரின் நண்பர்களும் அவரைச் சுற்றியுள்ள சூழலும் அவரது வாழ்க்கையை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. தீய சகவாசம் ஒருவரை தவறான பாதைக்கு இட்டுச் செல்லும் என்று சாணக்கியர் கூறுகிறார்.
எதிர்மறை தாக்கங்களை ஏற்படுத்தும் நபர்களிடமிருந்து விலகி இருப்பது மன அமைதியையும் வாழ்க்கை நிலைத்தன்மையையும் உறுதி செய்கிறது.
நல்ல நண்பர்கள் நல்ல சிந்தனைகளையும் செயல்களையும் உருவாக்க உதவுவார்கள். எனவே, நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும்

5.தன்னம்பிக்கை ஒருபோதும் விடவே கூடாது.
அவசியம் வெற்றியின் அடித்தளம் தன்னம்பிக்கையே என்று சாணக்கிய நீதி கூறுகிறது. தன்னம்பிக்கை கொண்ட ஒருவரை எந்தத் தடையும் எளிதில் தடுக்க முடியாது.
தன் முடிவுகளில் உறுதியாக இருப்பதுடன், பிறரின் கருத்துகளுக்கு தேவையற்ற அச்சம் கொள்ளாமல் செயல்பட வேண்டும். தன்னம்பிக்கை உங்களை மனதளவில் வலிமையானவராகவும், பிறர் மதிக்கும் நபராகவும் உருவாக்கும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |