இந்த தவறுகளை மட்டும் செய்யாதீங்க... வாழ்க்கையில தோல்வி துரத்தி துரத்தி வரும் ஜாக்கிரதை
சாணக்கியர் ஒரு சிறந்த அறிஞர், அரசியல்வாதி மற்றும் பொருளாதார நிபுணர். இவரின் கொள்ளைகளை கடைபிடிப்பவர்கள் வாழ்க்கையில் அனைத்து கஷ்டங்களையும் கடந்து வருவார்கள் என்று நம்பிக்கை உள்ளது.
ஆனால் சில தவறுகளை செய்தால் தோல்விகள் துரத்தி துரத்தி வருமாம். அந்த வகையில் என்னென்ன தவறு செய்யக்கூடாது என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
தோல்வியை ஏற்படுத்தும் தவறுகள்
மனஉறுதி இல்லையெனில் நீங்கள் எதிலும் வெற்றி பெற முடியாது. ஆம் கடுமையான உழைப்பு இருந்தாலும் மன உறுதி நிச்சயம் வேண்டும். இந்த தவறு உங்கள் பாதையில் தடைகளை ஏற்படுத்தும்.
நபர் ஒருவர் வெற்றி பெற வேண்டும் என்றால் கடின உழைப்புடன் நம்பிக்கை மிக முக்கியம். தன்னம்பிக்கையுடன் ஒருவர் பணிகளை செய்தால் நிச்சயம் வெற்றியை யாராலும் தடுக்கமுடியாதாம்.
மன சோர்வடைபவர்கள் வெற்றியை எட்டிப்பிடிப்பதில் கஷ்டப்படுவார்கள். மேலும் தோல்வியை சந்திப்பவர்கள் எதிர்மறையாகவே சிந்திக்கத் தொடங்குவார்கள். ஆகவே மனம் சோர்வடையாமல் இருப்பதற்கு கற்றுக்கொள்ளவும்.
வாழ்க்கையில் வெற்றிபெற என்ன செய்யலாம்?
நேர்மையுடன் கடின உழைப்பு மிக முக்கியமாகும். ஆம் தனது இலக்கை அடைய வேண்டும் என்றால் முழு நேர்மையுடன் கடுமையாக உழைக்க வேண்டும். இவ்வாறு கடின உழைப்பை மேற்கொள்பவர்கள் நிச்சயம் வெற்றியை தட்டித்தூக்குவார்கள்.
நமது இலக்கில் கவனம் நிச்சயம் வேண்டும். இலக்கை நீங்கள் கவனிக்கவில்லையெனில் உங்கள் பாதையிலிருந்து நாம் தொலைந்து போய் விடுவோமாம். ஆகையால் இலக்கின் மீது கண் வைத்தால் கடின உழைப்பினை மேற்கொள்ள முடிவதுடன், சரியான வெற்றிப்பாதையை நோக்கி பார்க்க முடியும்.
மற்றவர்களின் தவறுகளில் இருந்து நாம் கற்றுக்கொண்டால், நிச்சயம் வெற்றியை பெறலாம். எனவே மற்றவர்களின் தவறுகளில் இருந்து பாடத்தை கற்றுக்கொண்டு நேரத்தை வீணடிக்காமல் முன்னேறுங்கள். மேலும் வாழ்க்கையில் மீண்டும் அந்த தவறை செய்யாதீர்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |