இந்த குணமுடைய பெண்கள் திருமண வாழ்க்கையை நரகமாக்கிவிடுவார்கள்... எச்சரிக்கும் சாணக்கியர்!
பண்டைய காலத்தில் இந்தியாவில் வாழ்ந்த புகழ்பெற்ற அறிஞர், ஒரு சிறந்த இராஜதந்திரி மற்றும் ஒரு தலைசிறந்த பொருளாதார நிபுணராக திகழ்ந்து உலகம் முமுவதும் பிரபல்யம் அடைந்தவர் தான் ஆச்சாரிய சாணக்கியர்.
இவர் தனது வாழ்க்கையில் கடைப்பிடித்த பல்வேறு விடயங்கள் மற்றும் வாழ்க்கையில் சந்தித்த சவால்கள் மற்றும் அனுபவங்களின் தொகுப்பே சாணக்கிய நீதி ஆகும்.இன்றும் உலகளவில் சாணக்கிய நீதியை பின்பற்றுபவர்கள் ஏராளம் பேர் இருக்கின்றனர்.

சாணக்கியரின் கருத்துப்படி, ஆண்களின் வாழ்க்கை நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும் என்றால், இந்த குணங்கள் இருக்கும் பெண்களை ஒருபோதும் திருமணம் செய்துவிட கூடாது என எச்சரிதித்துள்ளார். இவ்வாறான பெண்கள் என்பது பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
தவிர்க்க வேண்டிய பெண்கள்
சாணக்கிய நீதியின் பிரகாரம், ஆண்கள் தங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும்போது, அந்த பெண்ணின் அறிவை விட அவர்களின் தோற்றத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஆனால் அறிவில்லாத, ஆனால் அழகிய தோற்றம் கொண்ட பெண்களால் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்காது என குறிப்பிடப்படுகின்றது.

மேலும் பெண்கள் மென்மையான குணம் கொண்டவராக இருக்க வேண்டும். மாறாக முரட்டுத்தனமான குணம் கொண்டவராக இருந்தால், ஒரு ஆண் அந்த பெண்ணைத் திருமணம் செய்துகொள்வது பற்றி துளியும் சிந்திக்கவே கூடாது என சாணக்கியர் எச்சரித்துள்ளார். இது திருமண வாழ்க்கையில் நிச்சம் மகிழ்ச்சியை கொடுக்காது என குறிப்பிடுகின்றார்.

சாணக்கியரின் கருத்துப்படி ,பொய் என்பது ஒரு மோசமான எதிர்மறையான குணமாகும். எப்போதும் பொய் சொல்லும் ஒரு பெண் குடும்பத்தையே அழித்துவிடுவாள் எனவே திருமணம் பற்றி சிந்திக்கும் போது பொய் சொல்லும் குணம் கொண்ட பெண்களை ஒருபோதும் வாழ்க்கை துணையாக தெரிவு செய்துவிட கூடாது என்கின்றார் சாணக்கியர்.ஏனெனில் அவர்கள் அந்தப் பொய்யைத் தன் கணவனுக்கு எதிராகவே பயன்படுக்கூடும்.

மேலும் வீட்டு வேலை செய்யத் தெரியாத பெண்களையும், ஒரு பெண்ணின் குடும்பப் பின்னணி மோசமானதாக இருந்தாலும், அல்லது அவருக்கு ஏதேனும் தீய குணங்கள் இருந்தலும், இப்படிப்பட்ட பெண்ணை திருமணம் செய்வது மிகவும் மோசமான அனுபவத்துக்கு காரணமாகிவிடும். இப்படிப்பட்ட பெண்களை முற்றிலும் தவிர்த்துவிட வேண்டும் என சாணக்கியர் எச்சரிக்கின்றார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |