சாணக்கியர் நீதி - இந்த நான்கு விஷயம் மனிதனுக்கு திருப்தி தராது
ஆச்சார்ய சாணக்கியர் தனது காலத்தில் மிகவும் அறிவாற்றல் மிக்கவராகவும், கற்றறிந்தவராகவும் அறியப்படுகிறார். தனது வாழ்நாளில், மனிதகுலத்தின் நலனுக்காக பல வகையான கொள்கைகளை இயற்றினார்.
இந்தக் கொள்கைகள் பின்னர் சாணக்கிய நீதி என்று அழைக்கப்பட்டன. வளமான வாழ்க்கையைத் தேடும் ஒருவர், சாணக்கிய நீதியில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது.
அந்த வகையில் சாணக்கியர் கூறுகிறார்மனிதனது வாழ்க்கையில் அவனுக்கு குறிப்பிட்ட சில விஷயங்கள் எவ்வளவு கிடைத்தாலும் தேவைக்கு இருந்தாலும் திருப்தியே தராது என்று கூறுகின்றார்.

சாணக்கியர் நீதி
பணம் - எவ்வளவு பணம் இருந்தாலும் அதற்கு எப்போதும் பற்றாக்குறை இருக்கும். ஆச்சார்ய சாணக்கியரின் கூற்றுப்படி, ஒரு நபரிடம் எவ்வளவு பணம் இருந்தாலும் என்ன இவ்வளவு தான் இருக்கிறது இன்னும் வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். இந்த பேராசை குணம் ஒருவரை தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும்.
யாரும் இறக்க விரும்புவதில்லை - ஒவ்வொரு நபருக்கும் ஒரு நாள் மரணம் நிச்சயம் என்று தெரியும், ஆனாலும் வாழ்க்கை மீதான ஆசை எப்போதும் முடிவதில்லை. வயதானாலும் யாரும் இறக்க விரும்ப மாட்டார்கள்.

பெண் சுகம் - உலகத்தில் பெண்ணை எல்லோரும் ஒரு போதையாகவே பார்க்கின்றனர். சிலர் ஒரு பெண்ணுடன் திருப்தி அடையாமல், மற்ற பெண்களுடன் தொடர்பு கொண்டு தவறான செயல்களைச் செய்யத் தயங்குவதில்லை. இப்படி பல பெண்களுடனான உறவுகள் பிரச்சனைகளுக்கு காரணமாகின்றன.
சுவையான உணவு - ஒரு சிலர் வித விதமான உணவை சுவைப்பதில் வல்லவர்கள். இது ஒரு பலவீனம். அதிலும் சிலர் உணவுக்காகவே வாழ்கிறார்கள். தினமும் விதவிதமான சுவையான உணவுகளைச் சாப்பிட்டாலும் அவர்களுக்குத் திருப்தி அடையாது. அத்தகையவர்கள் பல நோய்களுக்கு ஆளாவார்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |